Thursday, May 29, 2014
Wednesday, May 28, 2014
“முள்ளிவாய்க்கால்: ‘மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்” -பாஷண அபேவர்த்தன
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for
Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே
உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கமாட்டா.
இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?
முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான
படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப்
பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள்
அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர்
தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர்
சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:
‘சர்வதேசச் சமூகத்திலிருந்து யாராவது தடுத்து நிறுத்துவார்கள் என்று இலங்கை அரசு
ஒருபோதும் நம்பவில்லை. அதன் கணிப்பு சரியானதே. ஆனால் சில ராஜதந்திர ஆட்டங்கள் இதைச்
சுற்றி நடந்தன.’ ஆகவே நீண்ட காலமாக நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போர் ரத்தக்களரியில் முடிந்தமை வழமையான,
தர்க்கரீதியானது என
நாம் பார்க்க முடியாது. மாறாகக், கள்ளத்தனமாகக் கணக்கிடப்பட்ட சர்வதேச அரசியல் விளையாட்டின் விளைவாகவே
பார்க்கப்பட வேண்டும். உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், பொலிசார் அடித்தபோதும் துன்புறுத்தியபோதும்
இழுத்துக் கைதுசெய்தபோதும், அந்தந்த நாடுகளின் வீதிகளில் பல மாதங்களாக நின்றனர். ஓலமெழுப்பினர்.
விம்மினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்றனர். பொதுமக்கள் சதுக்கங்களைக்
கைப்பற்றியிருந்தனர். விரைவு நெடுஞ்சாலைகளை மறித்தனர். பலர் தீக்குளித்தனர். இவை எங்கள்
எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மைய நீரோட்ட ஊடகங்கள் இவற்றுக்கு எத்தகைய முக்கியத்துவமும்
வழங்கவில்லை. இனப் படுகொலை இடம்பெறுவதைப் பற்றி உணர்வுபூர்வமான செய்திகள் எதையும் வெளியிடவில்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்ற முதலாவது வீடியோ
முக்கியத்துவம் பெறுகிறது. இது வெளிவந்தமை அன்றைய சூழலை ஆட்டங்காணவைத்தது. இலங்கை அரசாங்கத்தைத்
தவிர வேறு எவருக்கும் அந்த வீடியோவைப் பொய்யெனச் சொல்லிப் புறம் தள்ளிவிடுவதற்கான துணிவு
இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் வழமைபோலவே இதையும் மறுத்தது. இப்படி மறுப்பது என்பது
அவர்களுக்கு ஒரு சடங்கு மாதிரி.
இந்த வீடியோ பிரதிகள் கிடைத்தபோது உண்மையிலேயே என்ன செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை.
இவற்றை வெளியிடுவதற்குச் சரியான, பொருத்தமான வழியைக் கண்டுபிடிக்கும்வரை அவை இரண்டு கிழமைகளாக
எங்களிடமே இருந்தன. இக்காலங்களில் சானல் 4 தொலைக்காட்சியுடன் எமக்கு எந்தவிதமான உறவும் இருக்கவில்லை.
ஆனால் இலங்கை ராணுவத்தால் நடாத்தப்படுகின்ற அகதிகள் முகாம்களுக்குள் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான ரகசியப் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட முயன்ற
சானல் 4இன் பத்திரிகையாளர்
ஒருவர் நாடுகடத்தப்பட்டிருந்தார் என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆகவே இந்த வீடியோவைச்
சர்வதேச மனித உரிமைகள் குழுக்களுக்கும் ஐ.நா. அங்கங்களுக்கும் அனுப்புவதோடு நின்றுவிடாமல்
அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையாளரையும் தொடர்புகொள்ள முயன்றோம். ஏனெனில் அப்படியான
ஒருவர்தான் இந்த ஆதாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பார்
என்பதை உணர்ந்திருந்தோம். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை. ஆனாலும் சானல் 4 தொலைக்காட்சியின் வெளிநாடுகளுக்கான
செய்திப் பிரிவினரோடு தொடர்புகொண்டு இதன் பின்னணியை விளக்கினோம். இவ்வாறுதான் சானல்
4 தொலைக்காட்சியுடனான
உறவுக்கு இறுதியாக வந்தடைந்தோம்.
நீங்கள் இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் முக்கியமான ஒரு
அங்கத்தவர். இந்த அமைப்பு எப்படி உருவானது என்பதைப் பற்றி எங்களுக்குக் கூறுவீர்களா?
இப்பொழுது தலைமறைவாக வாழும் பல பத்திரிகையாளர்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள்
ஆகியோரின் கூட்டு முயற்சி ஒன்றே இந்த அமைப்பின் உருவாக்கம். இதன் முதலாம் கூட்டம் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெர்லின்
நகரில் நடைபெற்றது. இதில் பதினைந்து தமிழ், சிங்களப் பத்திரிகையாளர்களும் மனித
உரிமைச் செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். நீண்ட நேர அலுப்பான விவாதங்கள் நம்மை
ஒரு முடிவுக்கு கொண்டுவந்து நிறுத்தின. கூட்டான குழுவொன்றை உருவாக்குவதற்கான தேவையையும்
முக்கியத்துவத்தையும் நாம் உணர்வதற்கு இந்த விவாதங்கள் நம்மை நிர்ப்பந்தித்தன. அதாவது
நாம் தனித்தனியாகச் செய்யும் வேலைகளைக் குழுவொன்றினூடாக ஒழுங்கமைக்கப்பட்ட வகையில்
செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்ந்தோம். ஆனால் பிற்காலங்களில்
நாம் முன்னெடுத்த செயல்பாடுகள் நமது குழுவின் ஆரம்ப நோக்கங்களை மேலும் தீவிரமாக மாற்றின.
ஏனெனில் நாம் குறிப்பிடத்தக்க சர்ச்சைக்குரிய சவாலான விடயங்களைக் கையில் எடுக்கவும்
அவற்றுக்கு முகங்கொடுக்கவும் வேண்டி இருந்தது. கடந்த மூன்று வருடங்கள் மிகவும் சவாலான
காலங்கள். ஆனால் நாங்கள் அவற்றை எல்லாம் கடந்து வந்தோம். ஆனால் எமது அமைப்பு தனித்திருக்கின்ற
மனிதர்களின் கூடாரமாகவோ சமூகநல நிறுவனமாகவோ உருவாவதிலோ மாறுவதிலோ ஒருவருக்கும் விருப்பமிருக்கவில்லை.
இவையெல்லாம் நம்மை மேலும் இறுக்கமாக ஒன்றிணைய வைத்தன.
இலங்கையிலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்ட பின்புலத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள
முடியுமா?
நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான எனது முடிவு அன்றைய சூழ்நிலையால் உருவானது. நானாக
நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானிப்பதற்குள்ளாகப் பலர் என்னை வெளியேறும்படி நீண்டகாலத்திற்கு
முன்பே அறிவுறுத்தினர். சாதாரணமாக இலங்கையில் இவ்வாறான விடயங்களுக்காக முன்கூட்டியே
எச்சரிக்கப்படுவதில்லை. ஆகவே இது தொடர்பான கடிதங்கள் அனுப்புவதோ பயமுறுத்துவதோ வழமையாக
நடைபெறுவதில்லை. இதனால் இவ்வாறான முடிவுகள் நமது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட
எதிர்வினைகளாகவே இருக்கின்றன. அதாவது பயங்கரமான சுழல்கள் நம்மை சூழ்ந்துவருவதை நாம்
உணர்கின்ற சந்தர்ப்பங்களில் நமது உள்ளுணர்வானது நாம் வாழ்வதற்கு ஏற்றவகையில் நம்மை
வழிநடாத்தும்.
நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முதலான கடைசி மூன்று மாதங்களும் எனது நாளந்த வாழ்வின்
வழமையான செயல்பாடுகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தேன். ஏனெனில் நான் எழுதுவது
மனித உணர்ச்சிகளைக் கிளர்ச்சியடைய வைக்கக்கூடியது எனவும் இதன் விளைவால் ஏற்படும் பாதிப்புகள்
மீள் நிவர்த்திக்க முடியாதவை எனவும் என் நண்பர்களும் சகசெயல்பாட்டாளர்களும் சிந்தித்தனர்.
ஆகவே எனது வீட்டிலிருக்காது தூரத்தில் எங்கேயாவது இருந்தேன். ஒரு நாள் தமிழ்ப் பாராளுமன்ற
உறுப்பினர் ரவிராஜ் கொலைசெய்யப்பட்டார். இவர் நம்முடன் பல போராட்டங்களில் முன்னணியில்
இருந்த பலரில் ஒருவர். நான் தமிழராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாது இருந்தபோதும்கூட,
எனக்கு நெருக்கமாக இருந்த
நண்பர்கள் நான் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டுமெனச் சிந்தித்தார்கள். இதன் பின்
மூன்று கிழமைகள் நாட்டிற்குள் இருந்துவிட்டுத் தலைமறைவாகச் சென்றேன். அன்று நான் எடுத்த
முடிவு சரியானதா என நிச்சயமில்லாது இருந்தபோதும், பிற்காலங்களில் நாட்டில் தொடர்ச்சியாக
நடைபெற்றவற்றைக் கூட்டிப் பார்க்கிறபோது எனது முடிவு சரியானது என்பதை உணர்ந்தேன்.
மே 2009இல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான உங்களது எதிர்வினை என்ன அப்பொழுது நீங்கள் எங்கே
இருந்தீர்கள்?
இப்போது போலவே போரின் கடைசிக் காலங்களில் நான் தலைமறைவாகவே இருந்தேன். இதனால் 2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் நாட்டைவிட்டு
வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன். நான் நாட்டைவிட்டு மிகத் தூரத்தில் வாழ்ந்தபோதும்,
இலங்கைக்குள் ஊடக வேலைசெய்யும்
என்னுடைய சகநண்பர்கள் பலரைவிடக் குறிப்பிட்ட சூழ்நிலை மற்றும் சம்பவங்கள் தொடர்பாகப்
பல தகவல்களை நன்றாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறேன். இக்காரணத்திற்கான
பின்னணி, மற்றவர்களைவிட
எனக்கு அக்கறை அதிகம் என்பதல்ல. மாறாக இலங்கையில் இருக்கின்ற பல்வேறு தடைகள் காரணமாக
அங்குச் செயல்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு இல்லாத சலுகை எனக்கு இருக்கிறது. அதாவது
அனைத்து மூலாதாரச் சக்திகளுடனும் தொடர்பு கொண்டு எல்லாவகையான தகவல்களையும் எந்தத் தடைகளும்
இல்லாது பெற்றுக்கொள்வதற்கான வழிகள் எனக்கு இருக்கின்றன. இந்த ஓர் உண்மையாலும்,
தலைமறைவாக இருந்தபோதும்,
நான் எழுதுவதைப் பிரசுரிக்கப்
பத்திரிகைகள் இருக்கின்றமையாலும் எனது பத்திரிகையாளர் தொழிலைத் தொடர முடிகிறது.
எனது தலைமறைவு வாழ்க்கையின் முதல் மூன்று வருடங்களும் நான் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு
சிங்களப் பத்திரிகைகளுக்குப் பத்திகளும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவந்துள்ளேன். என்னைப்
போன்றவர்களின் குரல்களும் வெளிவருவதற்கு ஓரளவான ஜனநாயக வெளியை வைத்திருப்பதற்கு இந்தப்
பத்திரிகைகள் முயல்கின்றன. இவற்றில் ஒவ்வொரு கிழமையும் வன்னியில் என்ன நடக்கிறது என்பதையும்
அந்த அழிவுகளையும் கொடூரங்களையும் எழுதினேன். இவை வெறுமனே தமிழ் மக்களை என்ன செய்கிறார்கள்
என்பதை வெளியிடும் கட்டுரைகளல்ல. மாறாக என் மக்களின் தார்மீக அறத்தை உயிர் வாழவைப்பதற்கான
அவாவினாலான ஒரு போராட்டமே. இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தென்பகுதியில் நடைபெற்ற தொடர்ச்சியான முடிவற்ற வன்முறைக் காலச் சுழல்களில் வளர்ந்த
தலைமுறையைச் சேர்ந்தவன் நான். பயங்கரமான காலங்களினூடாக வாழ்ந்திருக்கிறேன். மிகவும்
கோரமான, காட்டுமிராண்டித்தனமான
சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன். ஆனால் 2009 விதிவிலக்கானது. என்னுடைய வாழ்க்கையில்
மிகவும் நிம்மதியிழந்த மனச் சோர்வடைந்து வாழ்ந்த காலங்கள் அவை. அப்பொழுது மனிதர்களுக்கு
நடந்த பயங்கரமான துன்பங்களும் சோகங்களும் அழிவுகளின் அளவுகளும் கணக்கிடவோ கற்பனைசெய்யவோ
முடியாதவை. இந்தப் பேரழிவுகளினதும் இன அழிப்பினதும் ‘தினசரிச் செய்திகள்’ உள்வாங்கவோ கூறவோ முடியாதளவிற்கு
மோசமானவையாக இருந்தன.
ஆனால் இவற்றைப் பற்றித் தெற்கில் இருந்த அறியாமைக்கும் அவற்றைப் புரிந்துகொள்ள
முடியாதளவிற்கு உணர்வில்லாதவர்களாக இருந்ததற்கும் சாட்சியாக இருந்தமை என்னை மிகவும்
பாதித்தது. மிலேச்சத்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களாக நீங்கள் இருக்கும்போது
குறிப்பிடத்தக்களவு தார்மீக அறத்தை உணரக்கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். ஏனெனில்
என்ன நடத்திருக்குமென உங்களுக்குத் தெரியும். நீங்கள் எந்த விதமான மனப்பாதிப்பில் இருந்தபோதும்,
அழிவானது உடல்ரீதியாக
இருப்பின் உங்களது விதியை நீங்களே காணக்கூடியவராக இருப்பீர்கள். ஆனால் மோசமான போர்
வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களினூடான ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்
படுத்துபவராக நீங்கள் இருக்கும்போது, உங்களது சமூகத்தின் கூட்டு ஆன்மாவானது இவ்வாறான மிருகத்தனமான,
பயங்கரமான போர்க்குற்றங்களைப்
புரிந்தவர்களால் பிரதிநிதித்துவப்படுத்துகின்றபோது, இவ்வாறான போர்க்குற்றங்கள் புரிந்தவர்களின்
உணர்ச்சிகளைப் பகிர்ந்தும் பகிராததற்கும் அப்பால், அவர்களின் குற்றங்களைக் கூட்டாக நியாயப்படுத்தும்
சமூகத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றபோது, நீங்கள் தார்மீக அறந் தொடர்பான அதல
பாதாளப் படுகுழியில் வீழ்வீர்கள். ஏனெனில் நீங்கள் எவ்வாறு உங்கள் தோலை உரித்துக்கொண்டு
எவ்வாறு வெளியில் வரமுடியாதோ, அப்படித் தான் சமூகத்தின் கூட்டு அடையாளத் திலிருந்தும் நீங்கள்
உடனடியாகப் பாய்ந்து வெளிவர முடியாது.
நாம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்புகளையும் காட்டாது இருந்தமையானது இவ்வாறான
அழிவுகள் நடைபெறுவதற்கு நாமும் உடந்தையாக இருந்ததையே காட்டுகின்றது. சுய சீரழிவு நமக்குள்
ஏற்படுவதற்கு இந்த நிலை காரணமாக இருக்கின்றது. இது தார்மீகம், அறம் தொடர்பானது ஆகவே வெளியே
தெரியாது. இவ்வாறான இனப் படுகொலையும் அழிப்பும் போர்க் குற்றங்களும் நடப்பது தொடர்பான
சிறிதளவான அக்கறைகூடக் காட்டாமல் விட்டமையால், நாம் கூட்டுச் சமூகமாக இருக்கிறோம்
என்பதைக் கூறுவதற்கான தார்மீக அடிப்படையைக் கூட நாம் இழந்துள்ளோம். எங்களுடைய குற்றவுணர்வானது
எங்களது ஆன்மாவை முடமாக்கியுள்ளது. அது நமது ஆன்மாவை உள்ளிருந்தே அரிக்கிறது. ஒரு சிங்களவராக
நான் பெற்ற அனுபவம் இதுதான்.
தமிழர்-சிங்களர் உணர்வுத் தோழமை (solidarity) பற்றி என்ன கருதுகிறீர்கள்?
தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டத்தில் சிங்கள முற்போக்குவாதிகளின் பங்கு எவ்வாறு அமைய முடியும்?
மே 2009இல் இடம்பெற்ற தமிழ் மக்களின் இன அழிப்பிற்குப் பின் நாம் ஒரு முக்கியமான வரலாற்றுக்
காலகட்டத்தில் நிற்கிறோம். ‘முற்போக்கு’, ‘உணர்வுத் தோழமை’ போன்ற சொற்களை நாம் திரும்பிப் பார்த்துப்
புதிதாக வரைவிலக்கணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் இந்தச் சொற்களுக்கு
நாம் வழங்கி வந்த அர்த்தமும் வரைவிலக்கணமும் தமிழ் மக்களின் இன அழிப்பிற்குப் பின்
மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த இனப்படுகொலை உலகத்தை உலுப்ப வேண்டிய பேரழிவு.
இத்தகைய சூழலில் மௌனம் பேணுவது நடுநிலை என்று அர்த்தம் தராது. மௌனம் என்பது மறைமுகமான
அங்கீகாரம். குறிப்பிடத்தக்க அளவு சிங்கள முற்போக்காளர்கள் படுகொலைகளுக்கு எதிராக இருந்தார்கள்
என்பது உண்மைதான். எனினும், இன்னும் பலர் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ எனும் அபத்த நாடகத்தில் வருகிற
காண்டாமிருகங்கள் போல மாறிவிட்டனர்.
போர் தமிழ் மக்களுக்குக் கொண்டுவந்த பேரழிவுகள் ஒருபுறமும் என்றால், மறுபுறம் அது சிங்கள மக்களுக்கு
என்ன செய்தது என்பதை நாங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்குச்
செல்பவர் எவருக்கும் போர் ஏற்படுத்திய அழிவுகளை நேரடியாகப் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
அந்த அழிவுகளின் பிரம்மாண்டம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். தமிழ் மக்களின் ஒன்றிணைந்த
தேசிய வாழ்வு போருக்குப் பின்னர்கூட எப்படிச் சிதைக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள்
பார்க்க முடியும். ஆனால் போர், சிங்கள மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிற அற/தார்மீகச் சீரழிவை
நீங்கள் கண்ணால் பார்க்க முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிராக எத்தகைய குற்றத்தையுமே புரியவில்லை என்று அவர்கள் சொல்வதை
எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் மனத்தில் – சிங்கள மக்களின் மனத்தில்- உண்மையாகவே தமிழ்மக்களுக்கு
நடந்த, கற்பனைக்கும்
எட்டாத பயங்கரங்கள் நன்றாகத் தெரியும். அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரச படையினரின் மோசமான மூர்க்கத்தனத்தை நாம்
பார்க்க நேர்ந்தது. 1987-1990 காலகட்டத்தில் ஏறத்தாழ 60,000 சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அவர்களுடைய உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன் டயர் போட்டு எரிக்கப்பட்டன. எங்களுக்கெனவும்
மனிதப் புதைகுழிகள். கடத்தல்கள். ‘காணாமல் போதல்கள்’ வன்புணர்வுகள், அன்னையர் முன்னணி போன்ற அமைப்புகள்
என எல்லாமே இருந்தன. நினைவுச் சின்னங்களும் மரித்தோருக்காக எழுப்பப்பட்டன. எனவே இலங்கை
அரசு என்னவெல்லாம் செய்யும் என்பது சிங்கள மக்களுக்குத் தெரியாததல்ல. எங்களுக்கு இத்தகைய
அநியாயங்கள் நடக்கும்போது அவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது இலங்கை அரசு என்று சொல்ல
நாங்கள் தயங்கியதில்லை. ஆனால் இப்போது இவ்வளவு அநியாயங்களும் தமிழர்களுக்கு நிகழ்கிறபோது,
இலங்கை அரசு இப்படியெல்லாம்
செய்யாது என்று சிங்கள மக்கள் சொல்கிறார்கள்! ஒடுக்கப்படுகிற சிங்கள மக்களைக்கூட இத்தகைய
கருத்து நெருக்கமாக இந்தக் கொலைகார அரசிடம் இணைத்துவிடுகிறது.
எங்களுடைய அரசியல், அறவியல் அடிமைத் தளைகள் இவைதான். இந்தத் தளைகளை வேறு எவரும்
அகற்ற முடியாது. ஏனெனில் இவை நாமாகவே மாட்டிக்கொண்ட தளைகள். இந்த நச்சுத் தளைகளை உடைப்பதில்
தான் எங்களது – சிங்கள மக்களது – தார்மீக, அரசியல் விடுதலை தங்கியுள்ளது. ‘உணர்வுத் தோழமை’, ‘முற்போக்கு’ என்பதன் அர்த்தத்தைப் பற்றி
மீளச் சிந்திப்பதற்கு இது ஒரு முன் நிபந்தனையாகும்.
எவ்வாறு இந்தத் தளையை உடைப்பது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு.
எங்களுடைய நேரடியானதும் மறைமுகமானதுமான இரண்டு தளங்களிலும் எங்களுடைய ஒப்புதலோடுதான்
தமிழ் மக்களின் இனப்படுகொலை எங்கள் கண்முன்னால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான பொறுப்பை
நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒப்புதல் மூலம் மட்டும்தான் இன அழிப்பை நிகழ்த்திய
இலங்கை அரசிடமிருந்து நாங்கள் விலகிக்கொள்ள முடியும். இலங்கை அரசிடமிருந்து மட்டும்
அல்ல. இனப்படுகொலைக்குத் துணைபோன உலக வல்லரசுகளிடமிருந்தும் நாங்கள் விலகிக்கொள்ள முடியும்.
இன அழிப்பை மூடிமறைக்க இவர்கள் எல்லோருமே முயல்கிறார்கள்.
சிங்கள மக்களின் கூட்டு அடையாளம் என்பது தமிழ்மக்களின் இனப்படுகொலையை நிராகரிப்பதிலும்
அந்த நிராகரிப்பை நியாயப்படுத்துவதிலுமே தங்கியிருக்கிறது. எனவே இனப்படுகொலை தொடர்பான
எங்கள் பொறுப்பை ஒப்புக்கொள்வதன் மூலம் புதிய, தீவிரமான அரசியல் வழிமுறை ஒன்றை நாங்கள்
தொடங்கலாம். இப்படி நாங்கள் செல்வது ‘தோற்றுப் போய் விட்ட’ தமிழர்களுக்கு நாங்கள் வெளிப்படுத்துகிற
பெருந்தன்மை அல்ல.
மாறாக, எங்களது, வெட்கம் மிக்க தார்மீக அடிமைத்தளையிலிருந்து எம்மை விடுவிப்பதற்கான துயரவாழ்வு
இது. ஒடுக்கப்படுகிற தமிழ் மக்களுடன் அர்த்தம் பொதிந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு
இதுவே வழி அமைக்கும். சிங்களத் தமிழ் உணர்வுத் தோழமைக் கான முதல்படி இங்கிருந்துதான்
ஆரம்பமாக வேண்டும்.
தமிழில்: மீராபாரதி,
Tuesday, May 27, 2014
Wednesday, May 21, 2014
Monday, May 19, 2014
சர்வதேச பயங்கர வாதமும் இலங்கை முஸ்லிம்களும்
இலங்கை பிரஜையான சாகிர் ஹுசைன் பாகிஸ்தான் உளவுப்பிரிவுடன் தொடர்பானவர் என்ற குற்றச்சாட்டின்
அடிப்படையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதற்கு தீனி போட்டாற்போல் சர்வதேச பயங்கரவாத விஷேட நிபுணர் என குறிப்பிடப்படும் கலாநிதி
ரொஹான் குணரத்ன அவர்களின் அறிக்கை அமைந்திருந்தது.
அதாவது இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய பயங்கர வாத இயக்கங்களின் நடவடிக்கை காணப்படுவதாகவும்
முஸ்லிம் புத்திஜீவிகள் முஸ்லிம் இளைஞர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும்
தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பொது பல சேனாவும் தமது பங்கினை சரியாக செய்து
முடிக்க அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்படுத்தியதுடன் சாகிர் ஹுசைன் கைது,
கலாநிதி ரொஹான் குணரத்னவின்
அறிக்கை என்பவற்றை தூக்கிப்பிடித்து இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் காணப்படுவதாக
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைந்துள்ளனர்.
ரொஹான் குணரத்னவின் எழுத்துக்களில் ஆகர்சிக்கப்பட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது
பங்கிற்கு உப்புச்சேர்த்துல்லமையும் ஊடகங்களுக்கு நல்ல தலைப்புச்செய்தியாக மாறிவிட்டன.
இத்தகைய பின்னணியில் எதனை தேசிய பெரும்பான்மை தீவிர வாத அமைப்புக்களும், சர்வதேசமும் அடைய முனைகின்றன
என்பதனை நோக்க வேண்டியுள்ளது. தேசியத்தில் இத்தகைய செய்தி முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை
சகோதர இனத்திடம் ஒரு தீவிர சமூகமாக சித்தரிக்கும் முயற்சி என்பதனை வெளிப்படையாக புரிந்து
கொள்ளலாம்.
குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கிடையிலான ஆதிக்க போட்டியில் அந்நாடுகள் புலனாய்வுத்திட்டங்களுக்கும்
தாக்குதல்களுக்கும் பல்வேறு அமைப்புக்களையும் தனிநபர்களையும் பணிக்கமர்த்துவது ஒன்றும்
புதிய விடயமல்ல. குறிப்பாக இந்திய பாகிஸ்தான் நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் இத்தகைய
பல்வேறு நிகழ்ச்சித்திடங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளமை வெளிப்படையான உண்மைகள்.
அதே போன்று இவ்வாறு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படும் அனைத்து நபர்களும்
பயங்கரவாதிகள் அல்ல என்பதனை கடந்தகால சில நிகழ்வுகள் நிரூபனம் செய்துள்ளன.
2001 ஒக்டோபர் மாதம் விமானத்தினை கடத்தி மெல்போர்ன் நகரின் ரியால்டோ கோபுரத்தை தாக்க
திட்டமிட்டார் என்றகுற்றச்சாட்டின் அடிப்படையில் மும்பை நகரில் வைத்து கைது செய்யப்பட்ட
மொகமட் அப்ரோஸ் என்பவர் இந்திய நீதிமன்றினால்2002 ம் ஆண்டு விசாரணைகளின் பின்னர் நிரபராதி
எனக்கூரி விடுதலை செய்யப்பட்டமையை குறிப்பிட முடியும். சாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டு
இரண்டு நாட்களின் பின்னர் இடம்பெற்ற ரயில் குண்டு வெடிப்புக்கும் சாகிர் ஹுசைனுக்கும்
தொடர்பு இல்லை என இந்திய மத்திய புலனாய்வகம் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இன்னொருவகையில் தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின்
மீதும் சேரு பூசும் நடவடிக்கையாக கருத முடியாது. சாகிர் ஹுசைனுடன் தொடர்புடையவர்கள்
என கைது செய்யப்பட்ட மேலும் இருவரில் ஒருவர் இலங்கையரான சிவபாலன் (45) கைது செய்யப்பட்டமையினைவைத்து
ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இந்தியாவை பழிவாங்குவதற்காக பாகிஸ்தானுடன் கூட்டினைந்து
செயற்படுகின்றது என கூற முனைவது வடிகட்டிய முட்டாள்தனமாகவே அமையும்.
இந்திய பாகிஸ்தான் நாடுகளுடனான பல்வேறு கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத வியாபர முயற்சிகளில்
பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்களும் பாரியளவில் ஈடுபட்டு வருவதனை அண்மையில் பிரதம
மந்திரியின் பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முயற்சியிலிருந்து
தெரியவந்துள்ளமையை குறிப்பிட முடியும்.
இத்தகைய பின்னனியைக்கொண்டவராகவே சாகிர் ஹுசைன் காணப்படுவதாக ஊடகங்கள் தகவல்கள்
வெளியிட்டுள்ளன. இதே போன்று மேற்கு நாடுகளின் ஏஜன்டுகளாக செயற்படும் பெரும்பான்மை இனத்தைச்
சார்ந்த தனிபர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற
போதும் அவற்றை ஒட்டு மொத்த சகோதர பெரும்பான்மை இனம் செய்வதாக ஊடகங்களோ, பௌத்த தீவிரவாத அமைப்புக்களோ
விமர்சிக்க முற்படுவதுமில்லை. யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்த
பல பெரும்பான்மை இனத்தை சார்ந்த அதிகாரிகளை வைத்துக்கொண்டு
ஒட்டு மொத்த சிங்கள சமூகத்தை குற்றம் சொல்லவுமில்லை.
சிரியாவின் ஆள்புல எல்லைக்குள்
வைத்து ஹமாசின் அரசியல் தலைவர் காலித் மிசல் இஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளால் தாக்கப்பட்டு
தாக்குதல் தாரிகள் ஸ்தலத்திலேயே மடக்கிப்பிடிக்கப்பட்ட போது ஒட்டு மொத்த இஸ்ரேலியர்களும்
பயங்கரவாதிகள் என சர்வதேசம் குறிப்பிடவில்லை. எல்.ரீ.ரீ.ஈயின் முக்கிய தலைவர்களின்
ஒருவரான கேபி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோதும்
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் மலேசிய அரசு புலிகளாக நோக்கவில்லை. இவ்வாறு அடுக்கி
கொண்டு போகும் உதாரணங்கள் ஏராளம். எனவே சாகிர் ஹுசைன் விடயத்திலும் அவர் ஒரு பாகிஸ்தான்
அரசின் உளவாளியாக அமைந்திருப்பினும் கூட அவரை வைத்து ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தை
பயங்கரவாதிகளாக சித்தரிக்க முடியாது. கடந்த கால யுத்தத்தின்போது கடுமையாக பாதிப்படைந்த
சமூகம் என்ற வகையில் அன்று ஆயுதம் ஏந்தாத இலங்கை முஸ்லிம்கள், தமது புனித குர்ஆனில்,
பள்ளிவாசலில்,
கலாசார விழுமியங்களில்
மிலேச்சத்தனமாக பௌத்த தீவிர அமைப்புக்களினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படபோதும்,
மிகவும் அமைதியாகவும்,
விட்டுக்கொடுப்புக்களுடனும்
இந்நாட்டின் தலைவர்களினதும் உண்மையான பௌத்த பெரும்பான்மை மக்களதும் ஆதரவினை வேண்டி
நின்றமை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு துணை போகாது என்பதற்கான
போதிய சான்றுகளாகும்.
கலாநிதி லோனா தேவராஜா குறிப்பிடுவது போன்று ஆயிரம் வருடகாலங்களாக மத சகிப்புத்தன்மையுடன்
வாழ்ந்த இலங்கை முஸ்லிம்கள் போன்ற சிருபான்மை இனத்தின் உதாரணம் எந்த நாட்டிலும் இல்லை
என்ற கருத்து இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாத நடவடிக்கையில் என்றும் நம்பிக்கை வைக்கவில்லை
என்பதற்கான போதிய சான்றாகும். இத்தகைய நிலையில் பொதுபல சேனாவின் சுயநல இலாபங்கள் ஒருபுறமிருக்க
கலாநிதி ரொஹான் குணரத்னவின் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
கலாநிதி ரொஹான் குணரத்ன ஒரு எழுத்தாளராகவே இலங்கையில் காணப்பட்டதுடன் 1984 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியின்
விஞ்ஞான ஆலோசகராக கடமையாற்றியதுடன், உலகவங்கி, யூ.எஸ். எய்ட் நிறுவனங்களிலும் ஆலோசகராக கடமையாற்றினார்.
இலங்கை அரசு, இலங்கை புலனாய்வு துறையுடன் நெருங்கி செயலாற்றுபவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த
போதும் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்துவதில் இவரது
நூட்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளமையை அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானில் தலிபான்களால் பமிங்க்யான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்ட பின்னர் முஸ்லிம்
விரோத போக்கு இவரது எழுத்துக்களில் காணப்பட்டமையை அவதானிக்க முடியும். குறிப்பாக இரட்டைக்கோபுர
தாக்குதல்களின் பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கெதிரான
போர் என்ற எண்ணெய்க்கான யுத்தத்தில் அவுஸ்திரேலியாவை கூட்டணியில் உள்வாங்குவதற்கு இஸ்லாமியப்பயங்கரவாதம்
என்ற புதிய தொனியை நம்பகப்படுத்தி ஆப்கானில் கால்பதிக்க கலாநிதி ரொஹான் குணரத்ன அமெரிக்காவினால்
பயன்படுத்தப்பட்டார்.
இவரது பயங்கரவாதம் குறித்த பல்வேறு கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும்பாலானவை வெறும்
யூகங்க்கலாகவே அமைந்திருந்தன என்பதனை பல்வேறு இராணுவ ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாக மலேசிய அரசுக்கும் பிலிப்பைனின் மோரோ இஸ்லாமிய இயக்கத்திற்கும் தொடர்பு காணப்படுவதாக
ரொஹான் குணரத்ன குறிப்பிட்ட பின்னர் தமது கருத்துக்களை மாற்றியமைத்தமையும்,
பாளி குண்டு வெடிப்பில்
சம்பந்தப்பட்ட ஹம்பாலி என்பவர் அவுஸ்த்ரேலியாவிற்கு பலதடைவகள் வந்து சென்றிருப்பதாக
தமது நூலில் குறிப்பிட்ட பின்னர் அவுஸ்திரேலிய துறை புலனாய்வினை மேற்கொண்டு மேற்படி
குணரத்னவின் கருத்து உன்மைகலற்றது என குறிப்பிட்டமையும் என பல்வேறு உதாரணங்களை விமர்சகர்கள்
முன்வைத்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் குணரத்னவின் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களின்
செயற்பாடு குறித்த கருத்துக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக
எதிர்வரும் காலங்களில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் வாங்கப்ப்படுமிடத்து
தெற்காசியாவில் புதிய தளங்களை உருவாக்க வேண்டியநிலையில் அமெரிக்கா உள்ளது. மாலைதீவு
தளம் அமைப்பதற்கான அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. சீன, இந்திய பிராந்திய ஆதிக்க சக்திகளை
எதிர்கொள்வதற்கு பௌதீக ரீதியில் இலங்கையைத் தவிர பொருத்தமான இடம் வேறொன்றும் இல்லை
என்பது எவரும் அறிந்த விடயம். ஆனால் கடந்த கால இலங்கை மீதான அமெரிக்க அரசின் நிலைப்பாடு
இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு கசப்புணர்வினை ஏற்படுத்தி இருக்கின்றது.
2013ல் இலங்கை மீதான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான பயிற்சிகள், கரையோர பாதுகாப்பு பயிற்சிகள்
என்பன அமெரிக்க அரசினால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. என்ற போதும் சீன ஆதிக்கம்,
ரஷ்யாவின் சமகால பிராந்திய
அச்சுறுத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் அமெரிக்க சார்பு தளங்களையும் இராணுவ நிகழ்ச்சித்திட்டங்களையும்
தெற்கசியப்பிராந்தியத்தில் உருவாக்குவதற்கான அவசர தேவையாக அமைந்துள்ளது. எனவேதான் ஏற்கனவே
அமெரிக்க பின்புலத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய- பசுபிக் பிராந்திய பயங்கரவாத குழுக்கள்
தொடர்பான ஆய்வு மையம் ஒன்றினை அமைப்பதுடன் அதனூடாக பிராந்திய நாடுகளுக்கு பயங்கரவாதம்
என்ற புரளிகளை கட்டவிழ்த்து அமெரிக்க ஆதிக்கத்தினை காலூண்டச் செய்வதற்கான நிகழ்ச்சி
நிரலின் அடிப்படையிலேயே தற்போது கலாநிதி குணரட்னவினால் இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில்
காலூன்ருகின்றது என்ற கருத்து திட்டமிட்டு பரப்ப படுகின்றது. சாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டதுடன்
பாக் தீவிரவாதிகள் இஸ்ரேல், அமெரிக்க தூதரகங்க்களை இந்தியாவில் வைத்து தாக்க திட்டமிட்டுள்ளனர்
என்ற கதையாடல்கள் அமெரிக்காவை இலங்கைக்குள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற போர்வையில்
சுதந்திரமாக தளம் அமைத்து செயற்பட வழியமைக்கும் முன்னேற்பாடாகவே அமைந்துள்ளது என அனுமானிக்க
முடிகின்றது.
பொதுபல சேனா அமைப்பு மியன்மாரின் தீவிரவாத குழுத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்கள்
மேற்கொண்டமையும், பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞான சேகர தேரர் ஆயுத பயிற்;சி பெற்றமையும் குறித்து ஊடகங்களில்
தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பொது பல சேனாவை ட்ரெக்; நிறுவனம் பயங்கரவாதக் குழு என பட்டியல்
படுத்தப்பட்ட நிலையிலும் கலாநிதி ரொஹான் குணரத்ன அவர்களினால் பொது பல சேனாவை பயங்கரவாத
இயக்கம் என குறிப்பிடமுடியாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் இலங்கை
முஸ்லிம்களுக்கும் முடிச்சுப்போட நினைப்பது சரியான பகுப்பாய்வு முறையாக அமையாது. மொனேஷ்
பல்கலைக்கழக பயங்கரவாத பகுப்பாய்வாளர் டேவிட் ரைட் நெவில்லே குறிப்பிடுவது போன்று எல்லா
புலனாய்வு மையங்களும் சமனான நம்பகத்தன்மை கொண்டவையல்ல.
குறிப்பாக தெற்காசியாவில் காணப்படும் சில புலனாய்வு அமைப்புக்கள் அதிகம் அரசியல்
மயப்படுத்தப்பட்டதாகவும், அரசின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கமைய செயற்படுபவையாகவும் அமைந்துள்ளன
என்பதிலிருந்து கலாநிதி குணரத்னவின் கூற்றையும் நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில் அவுஸ்திரேலிய
ஊடகவியலாளரும் வர்ணனையாளருமான ப்ரைன் டூஹே கலாநிதி குணரத்ன பற்றி குறிப்பிடும்போது
அடிப்படையற்ற பலவிடயங்களை அவரது வாதங்கள் கொண்டுள்ளது என குறிப்பிடுகின்றார்.
எது எவ்வாறிருந்த போதும் இலங்கை முஸ்லிகள் ஒரு போதும் பயங்கரவாதத்திற்கு துணைபோவதற்கு
தயாராக இல்லை என்பது யதார்த்தமானதாகும். அதே போன்று சமூகத்தில் சுயநலங்களுக்காக சமூகவிரோதச்செயல்களிலும்,
குற்றச்செயல்களிலும்
ஈடுபாடுடயவர்களை அவதானமாக அடயாளம் கண்டுகொள்ள முயற்சிப்பதுடன் அத்தகைய நபர்கள் தொடர்பில்
தகவல்கள் கிடைக்கப்பெறுமிடத்து பாதுகாப்புத்தரப்புக்கு தெரியப்படுத்துவதும் கடமையுமாகும்.
நன்றி :
ஜுனைட் நளீமி
www.sonakar.com
Saturday, May 17, 2014
Thursday, May 15, 2014
நுற்றாண்டை அனுஷ்டிக்கும் சிங்கள-முஸ்லிம் கலவரம் (1915-2015 )
இன்றைய காலகட்டத்திலே முஸ்லிம்களுக்கும் அவர்களின் வர்த்தகத்திற்கும் அவர்கள் பெரிதாக
மதிக்கும் மார்க்கத்திற்கும் பேரின சமூகத்தின் தீவிர இனவாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும்
நெருக்கடிகள் அளப்பெரியதாகக் காணப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தமது சகிப்புத்தன்மையின் அளவினை கணீப்பீடு
செய்து வருகின்றார்கள். உண்மையில் இஸ்லாத்தின்மீது அவர்கள் கொண்டுள்ள அளவில்லா பற்றே
இச்சகிப்புத் தன்மைக்கு காரணியாக அமைந்துள்ளது எனலாம்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் அவர்களின் அடிப்படைவாதம்
இந்நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றிவிடக்கூடும் என்றும், முஸ்லிம்களிடம் வியாபாரம் செய்யக்கூடாது
என்றும், முஸ்லிம்களுடன்
எவ்விதமான தொடர்புகளும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், முஸ்லிம்களுக்கென தனியான சட்டங்கள்
தடைசெய்யப்படல் வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையான ஆர்ப்பாட்டங்கள்,
ஊர்வலங்கள் என்றும்,
முஸ்லிம்களின் பாரம்பரிய
வரலாறுகளை சிங்கள மக்கள் மத்தியில் தவறாக முன்வைத்து நேரடியாக முஸ்லிம்கள்மீது தீவிரமான
கோசங்களை எழுப்பிக்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு முஸ்லிம்கள் மீது பகிரங்கமாக குறிவைத்து அவர்களை தாக்க முனைவதற்கு முஸ்லிம்கள்
இந்நாட்டிற்குச் செய்த குற்றம்தான் என்ன? இந்த நாட்டு முஸ்லிம்கள் குறுகியகால வரலாறுகள் படைத்தவர்களா?
அல்லது இந்நாட்டு இறைமைக்கு
எதிராக செயற்படுகின்றவர்களா? இந்நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களா? அல்லது நாட்டைப் பிரித்து தனிநாடு
கோருபவர்களா? என்ற கேள்விகள் தொடராக எமக்குள் எழுந்து கொண்டு வருகின்றன. இவ்வாறான கேள்விகளுக்குக்
பதில் காண எமது முஸ்லிம் சமூகம் இந்நாட்டுக்கு வருகைதந்த பூர்வீக வரலாற்றைத் திரும்பிப்
பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்பே அரேபியர்கள் இந்நாட்டோடு வர்த்தக தொடர்பில் இருந்து
வந்துள்ளனர். அரேபியர் எனச் சொல்லப்படுவர்கள் முஸ்லிம்களைத் தவிர வேறொருவருமில்லை.
உலகத்தில் இஸ்லாத்தின் தோற்றம் பற்றியும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சி பற்றியும்
அறிந்த இலங்கையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமூகம் அதனை அறிந்து கொள்வதற்காக தமது தூதுவர்
ஒருவரையும் அவருடன் துணையாக மேலும் ஒருவரையும் மதீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
அத்தூதுவர் மதீனாவை அடைந்தபோது உமர் (ரழி) அவர்கள் ஆட்சியிலிருந்தார்கள். அவர்களின்
ஆட்சியில் இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டு நாடு திரும்பும் வேளையில் அத்தூதுவர் இறந்துபோகிறார்.
தூதுவருடன் சென்றவர் வந்து இஸ்லாம் பற்றி தமது சமூகத்தாரிடம் கூறியதாக வரலாறுகள் தெளிவாகக்
கூறுகின்றன.
15ம் நூற்றாண்டில் போத்துக்கீயர்கள் வியாபாரத்திற்காக இந்த நாட்டினுள் நுழைந்து நாட்டை
ஆக்கிரமித்தார்கள். இவர்களைப் போன்று முஸ்லிம்கள் நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. முஸ்லிம்கள்
இந்நாட்டு மக்களுடன் மிகவும் நெருக்கமானவர்களாகவும் விசுவாசிகளாகவும், படைத் தளபதிகளாகவும்,
வீரர்களாகவும்,
மருத்துவர்களாகவும்,
வியாபாரிகளாகவும்,
நாடுகளுக்கிடையில் உறவுகளை
இணைக்கக் கூடியவர்களாகவும் காணப்பட்டார்கள்.
இந்த நெருக்கமும் நம்பிக்கையும்தான் இந்நாட்டு பெண்களை அரேபியர்கள் மணந்து இஸ்லாமிய
அடிப்படையில் வாழும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு அரச சபையிலும் அவர்களுக்கு
இடம் கொடுத்து மதஸ்தலங்கள் அமைத்துக் கொள்வதற்கும் முழுச்சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது.
போத்துக்கேயர்கள் தமக்குக் கீழ் இந்நாடு இருக்க வேண்டும் என எண்ணினார்கள். இதற்குத்
தடையாக முஸ்லிம்கள், சிங்கள மன்னர்களிடத்திலும் சிங்கள மக்களிடத்திலும் நெருக்கம் உள்ளவர்களாகவும்,
விசுவாசம் உள்ளவர்களாகவும்
செல்வாக்குக் கொண்டவர்களாக காணப்பட்டனர். நாட்டைவிட்டு முஸ்லிம்களை துரத்த வேண்டும்
என்ற நடவடிக்கையை முதன்முதலாக போத்துக்கேயர் மேற்கொண்டனர்.
போத்துக்கேயர் இந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஆரம்ப காலப்பகுதியில் முஸ்லிம்களின்
வியாபாரங்களை முடக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி செயற்பட்டனர். அது மாத்திரமல்லாது
முஸ்லிம்களின் மார்க்க சுதந்திரத்திற்கும் தடை விதித்தனர்.
போத்துக்கேயரின் பிரித்தாளும் தன்மையினால் ஒரே மன்னனின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டுவந்த
இலங்கை ஒரே குடும்பத்திலுள்ள அண்ணன் தம்பிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்து ஆட்சியை
முதலாம் புவனேகபாகு, மாயாதுன்னை, மத்துமபண்டார என மூன்றாகப் பிரிந்தனர். பின்னர் இவ்வாறு பிரித்ததோடு இவர்கள் நின்றுவிடாமல்
முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரிந்து கொண்ட மன்னர்களுக்கிடையில் சண்டைகளை
தோற்றுவித்தனர்.
சண்டையின்போது போத்துக்கேயரிடம் உதவி கேட்கும் மன்னனிடம் முஸ்லிம்களை துரத்தும் அல்லது அவர்களை அழிக்கும் மன்னர்களுக்கு தாம் உதவுவதாக அறிவித்தனர்.
சண்டையின்போது போத்துக்கேயரிடம் உதவி கேட்கும் மன்னனிடம் முஸ்லிம்களை துரத்தும் அல்லது அவர்களை அழிக்கும் மன்னர்களுக்கு தாம் உதவுவதாக அறிவித்தனர்.
உண்மையிலேயே முஸ்லிம்களையும் அவர்களின் செல்வாக்கு மற்றும் வளர்ச்சியைக் கண்டு
போத்துக்கேயர்கள் மிகவும் பயம் கொண்டவர்களாக காணப்பட்டனர். முஸ்லிம்களை துரத்தியடிக்காமல்
தமது கிறிஸ்துவ மதத்தினை பரப்ப முடியாது என்பதிலும் அவர்கள் உறுதி கொண்டிருந்தனர்.
கொழும்பிலுள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காக போத்துக்கேயர்கள் மூன்று நிபந்தனைகளை விதித்தார்கள்.
(1) முஸ்லிம்களை கொழும்பிலிருந்து விரட்ட வேண்டும்.
(2) இந்தியாவிலிருந்து வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இரு பருவகாலத்திற்கு மாத்திரமே கொழும்பில் தங்க வேண்டும். இதனை மீறுவோர் கொல்லப்படுவர். இவ்விரு நிபந்தனைகளையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவில்லை.
(3) முஸ்லிம்கள் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என அறிவித்திருந்தார்கள். இதனை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தினார்கள்.
(1) முஸ்லிம்களை கொழும்பிலிருந்து விரட்ட வேண்டும்.
(2) இந்தியாவிலிருந்து வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இரு பருவகாலத்திற்கு மாத்திரமே கொழும்பில் தங்க வேண்டும். இதனை மீறுவோர் கொல்லப்படுவர். இவ்விரு நிபந்தனைகளையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவில்லை.
(3) முஸ்லிம்கள் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என அறிவித்திருந்தார்கள். இதனை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தினார்கள்.
கொழும்பிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களில் இந்திய வம்சாவளியினர் இந்தியாவிற்குச்
சென்றனர். ஏனைய முஸ்லிம்களை கண்டி செனரத் மன்னர் வரவேற்று மாவனல்ல, மடவள, அக்குரனை, கம்பளை, உக்குவெல, மஹியங்கன (பங்கரகம்மான),
குருநாகல் போன்ற ஊர்களில்
குடியமர்த்தி பாதுகாப்பளித்தான்.
போத்துக்கேயரை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒல்லாந்தர் 1658இல் இந்நாட்டை ஆக்கிரமித்தார்கள்.
இவர்களும் முஸ்லிம்கள்மீது மிகவும் பொறாமை கொண்டவர்களாகவே காணப்பட்டனர். போத்துக்கேயரைப்
போன்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களை விரட்டுவதற்காக
கண்டி மன்னன் ஆங்கிலேயரின் உதவியை நாடிச் சென்றான்.
பின்னர் ஆங்கிலேயேர் கண்டி இராஜ்யத்தைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை முழுமையாக ஆங்கிலேயரின்
ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. இவர்களது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் போத்துக்கேயர்
மற்றும் ஒல்லாந்தரின் காலம் போன்று கடுமையானதாக இருக்கவில்லை என்பதே வரலாறு.
இவ்வாறு ஆதிகாலம் தொடக்கம் பிரித்தானியரின் காலம் வரையில் முஸ்லிம்களுக்கு எதிராக
இந்நாட்டு மன்னர்களும், சிங்கள மக்களும் எதிராக செயற்பட்டதில்லை. சிங்களவர்களும் முஸ்லிம்களும்
ஒன்றாக கலந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். சுதந்திரத்தினை பெற்றுக்கொள்ளும் காலம் நெருங்கிக்
கொண்டுவந்த வேளையில் 1915 மே 28 இல் கம்பளையில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரம் மிகவும் கசப்பான
ஒரு நிகழ்வாக இன்றுவரை பார்க்கப்படுகின்றது.
கண்டி பள்ளிவாசலுக்கு முன்பாக சிங்களவர்களின் பெரஹர சத்தங்களுடன் செல்லக்கூடாது
என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை சிங்களவர்கள் நிராகரித்தனர். இப்பிரச்சினை
நீதிமன்றம் சென்றபோது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பள்ளிவாசலுக்கு முன்னால் சத்தத்துடன்
ஊர்வலம் செல்ல முடியாது என்ற கோரிக்கை முஸ்லிம்களுக்கு சார்பானதாக இருந்தது.
இதனால் இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட மிகவும் மோசமான சிங்கள
முஸ்லிம் காலவரமாக ஏற்பட இது மாத்திரம் காரணமாக இருக்கவில்லை. கடந்த சில வருடங்களாக
முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கும், மார்க்க செயற்பாடுகளுக்கும் எதிராக தீவிரவாத பௌத்த தேரர்களால்
மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் போன்றே அக்கலவரத்திற்கு சில ஆண்டு காலத்திற்கு
முன்பிருந்ததே சிங்களவர்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை தீவிரவாத பௌத்த தேரர்களால்
பரப்பிவந்துள்ளார்கள்.
சுமார் 1875ம் ஆண்டுக்குப் பின்னர் தெற்காசியாவிலே பௌத்தத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட அநாகரீக
தர்மபால என்ற பௌத்தவாதிகள் இந்த நாடு சிங்களவர்களின் நாடு, இந்நாட்டிலே சிங்கள சமூகம்,
சிங்கள மதம் மட்டுமே
இருக்க வேண்டும் என்ற கோசங்களை முன்வைத்துவந்தார்.
சிங்களவர்கள் அல்லாத தமிழர்கள், இந்திய தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்நாட்டிலிருந்து
வெளியேற்றப்பட வேண்டும் எனவும், இவர்களுக்கு இந்நாட்டில் எவ்விதமான உரிமையும் கிடையாது. இவர்களின்
செல்வாக்கு முறியடிக்கப்படல் வேண்டும் சிங்கள அப்பாவி மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்
என்றெல்லாம் பல வருட காலமாக சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துக்களை
முன்வைத்தவண்ணம் இருந்ததும் 1915இல் ஏற்பட்ட கலவரத்துக்குப் பின்னனிக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
இக்கலவரம் கம்பளையில் துவங்கி கண்டி, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, மஹியங்கனை போன்ற மாவட்டத்திற்கும் பரவியது. அன்றைய புள்ளி
விபரங்களின் படி ஆயிரக்கணக்கான வீடுகளும் கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான
கடைகள் முற்றாகவே எரிக்கப்பட்டன பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. முஸ்லிம்கள்
வெட்டிக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயங்களுக்குள்ளானார்கள். 1915 வரை இத்தகைய ஒரு இனக் கலவரத்தையும்
பேரழிவையும் இலங்கை கண்டதில்லை.
நாட்டின் சுதந்திரத்தோடு ஆங்கிலேயரின் டொமினியன் அந்தஸ்த்து என்ற விடுதலையையும்
பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெற்றுத்தருமாறு டீ.எஸ்.
சேனா நாயக்கா அவர்களிடம் பிரித்தானியர் கேட்டனர். அப்போது முஸ்லிம்களின் ஆதரவிலேயே
மூன்றில் இரண்டைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
பாராளுமன்றத்திலே இந்த பிரேரணையை முன்வைத்து முஸ்லிம்கள் பற்றி உரையாற்றிய நாட்டின்
தலைவர் டீ.எஸ். சேனாநாயக்க “முஸ்லிம்கள் பற்றிக்கூறுவதாக இருந்தால் அவர்களின் நிதானமான போக்கைக்
கண்டு நாம் எல்லோரும் பாராட்டுகிறோம். சிங்கள அடக்குமுறை என்ற கதையை முஸ்லிம்கள் ஒருபோதும்
கூறவில்லை. அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய நாம் முனைந்துள்ளோம். அவர்கள் இந்த பிரேரணையை
ஆதரிப்பார்கள் என நம்புகின்றோம்” என்றார்.
சபையிலே முஸ்லிம் பிரதிநிதியாக இருந்த ரீ.பி. ஜாயா அவர்கள் “இச்சந்தர்ப்பத்திலே இனரீதியான
கோரிக்கைகள் எதையும் நாங்கள் முன்வைக்க மாட்டோம். நாட்டுக்கு அரசியல் சுதந்திரம் கிடைப்பதற்கு
நாங்கள் ஒருபோதும் தடையாகவும் இருக்க மாட்டோம். மக்களோடு மக்களாக நின்று நாட்டின் சுதந்திரத்திற்காக
பாடுபடுவோம். அரசியல் சுதந்திரத்தைப் பொறுத்த வரையில் எமது சமூகத்திற்கு கிடைக்கவிருக்கும்
எந்த நன்மைகளையும் சலுகைகளையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்” என்றார்.
இது தொடர்பில் அப்போதைய இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவர் சேர் றாஸிக் பரீட் அவர்கள்,
“நாட்டின் கௌரவ தலைவருடைய
இந்த பிரேரணைக்கு சோனகர் சங்கம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருகின்றது. என்னுடைய
சமூகம் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது. சிங்கள சகோதர சகோதரிகளைப் போல்
சோனகர்களும் இத் தாய் நாட்டின் தவப்புதல்வர்களாவார்கள். எந்தப் பிரச்சினையையும் நல்லெண்ணத்துடனும்
ஒற்றுமையுடனும் நாம் அணுகினால் அதைத் தீர்த்துக் கொள்ள முடியும். எமது சினேக கரங்களை
எம்முனைய சிங்கள சகோதரர்களுக்கு நாம் நீட்டுகின்றோம்.” என்றார்.
முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பல்வேறுபட்ட ஒற்றுமைகளும் நம்பிக்கைகளும்
காணப்பட்டுவந்த வரலாறுகள் இருக்கையில், உலக மக்களின் சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த பௌத்தம்,
இன்று இலங்கையில் சாந்தியையும்
சமாதானத்தினையும் அழிக்க போராடுகிறது.
வைராக்கியத்தால் வைராக்கியத்தை வெல்ல முடியாது என்ற புத்தபகவானின் போதனைகளை புறந்தள்ளிவிட்டு
ஒரு கையில் இனவாதத்தையும் மறு கையில் பௌத்த மதத்தையும் ஏந்தியே பௌத்தத்தை களங்கப்படுத்துன்றது.
இதேபோலவே எதிர்வரும் 2015ம் ஆண்டினை சிங்கள முஸ்லிம் கலவரத்தின் நூற்றாண்டாக கருதும்
இவ்வேளையில் அது போன்ற கலவரத்திற்காக தூபமிடும் நடவடிக்கைகளில் இன்று சிங்கள தீவிர
பௌத்தர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களை நாட்டை விட்டு துரத்தவேண்டும்
என்ற நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி சிங்கள மக்களை தூண்டி விடுகிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் முஸ்லிம்களும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களும் உண்மைத் தன்மையை அறிந்தும்,
உணர்ந்தும் அமைதியுடனும்
சாந்தத்துடனும் இருப்பது எமக்கு பெரும் ஆறுதலைத் தருகின்றது.
நன்றி : www.sonakar.com
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்,
மாநகர சபை உறுப்பினர்,
கல்முனைTuesday, May 13, 2014
Monday, May 12, 2014
Saturday, May 10, 2014
Monday, May 5, 2014
பொதுபல சேனா போத்தலுக்குள்ளிருந்து வந்த பூதம் போன்றது! ராவய.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் அரசாங்கப் படையினருக்குமிடையே நீண்ட காலமாக நிலவி
வந்த யுத்த நிலைமையில் கூட, அரசாங்கப் பாதுகாப்புடனான காவியுடைதரித்த குழுவொன்றினால் இனவாதம்
மற்றும் இனவெறி இவ்வாறு பகிரங்கமாக விதைக்கப்பட்ட துர்ப்பாக்கிய காலகட்டமொன்று இருக்கவில்லை.
அவ்வாறான காலங்களில் பள்ளிவாசல்களை தாக்கவில்லை. கோயில்களை கொள்ளையிட்டது கிடையாது.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு எதிராக பொதுபலசேனா போன்ற குழுவினர் பகிரங்கமாக
தம்பட்டமடிக்கவுமில்லை. என்ன ஆச்சரியமெனில் இவ்வாறான பைத்தியக்காரர்களின் பைத்தியக்காரச்
செயல்கள் வெளிப்பட்டது யுத்தம் முடிவடைந்ததன் பின்பாகும். இப்போது இவ்வாறான பைத்தியக்காரர்களுக்கெதிராக
செயற்படும் உண்மையான பௌத்த தேரர்களுக்குக் கூட அவர்களிடமிருந்து மீள முடியாதுள்ளது.
ஜெனீவா வாக்கெடுப்பையொட்டி சிறிது காலம் அமைதி காத்துவந்த பொதுபலசேனா கடந்த வாரம்
போத்தலொன்றுக்குள்ளிருந்து விடுவிக்கப்பட்ட பூதமொன்றினைப் போன்றதொரு நிலை தெளிவாகிறது.
எனினும் ஜெனீவாவில், நாட்டில் வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை மதத்தவர்களுக்கு கடும் போக்காளர்களினால்
எந்தவித அச்சுறுத்தல்களும் இடம்பெறுவதில்லையென அரசாங்கம் வாய் நிரம்பக் கூறியது. மத
சுதந்திரத்திற்கான உரிமை எமது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அங்கு கூறியது
உலகை சிரிப்பூட்டுவதற்காகும். பிரசாரம், பொய் போன்ற மூடி மறைப்புக்களால் பாவச் செயல்களை மறைப்பதற்கு
முயற்சித்த அரசாங்கத்தின் பெரிய ஊடக இயந்திரம் தற்போது மெதுவாகவெனினும் நிலையாகவே அந்த
செயற்பாட்டில் தோல்வி கண்டுள்ளது.
பொதுபலசேனாவின் தேரர்கள், சட்டத்தின் எந்தவொரு தண்டனைக்கும் உட்படாது சிறுபான்மை மதத்தவர்களுக்கெதிராக
சண்டாளத்தனம் புரிகின்ற போது நாட்டில் அனைத்து மதங்களும் சுதந்திரம் உள்ளதாகக் கூறுவது
வேடிக்கையானதாகும். கடந்த வாரம் பொதுபலசேனாவின் தேரர் மற்றொரு தேரருக்கு அச்சுறுத்தல்
விடுக்கின்ற சந்தர்பத்தில்கூட, இரண்டாவதாகக் குறிப்பிட்ட தேரரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு
பொலிஸார் அவ்விடத்தில் இருந்த போதிலும் கூட முடியாது போயுள்ளது. இச்சம்பவத்தில் அதிக
அச்சமடைந்த விஜித தேரர் பின்னர் செய்த முறைப்பாட்டினை அடுத்து வாக்கு மூலமொன்றினை பெற்றுக்
கொள்வதற்கு பொதுபலசேனாவின் செயலாளரான தேரரை கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தது
ஒருவகை நாடகம் மட்டுமே. அவ்வாறு பெறப்படும் வாக்குமூலத்தின் மூலம் இடம்பெறும் விசாரணைகளுக்கு
என்ன நடப்பதென்பதை நாம் நன்கு அறிவோம்.
ஜெனீவாவில் பதிலளித்து அரசாங்கம் முன்வைத்த சாட்சியத்தில் சிறுபான்மை மதத்தவர்களுக்கெதிராக
மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக அபூர்வமாகவே இடம்பெறுகின்ற நிகழ்வுகளாகுமெனவும்
அத்தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தகவல்கள் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது
சம்பந்தமாக விசாரணைகைள மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் அங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை அரசாங்கம் அவ்வாறான அபூர்வமான சம்பவங்கள்,
பல இன்னல்களை,
பல மதங்களை,
பல கலாச்சாரங்களை கொண்ட
எந்தவொரு நாட்டிலும் இடம்பெறக் கூடியதொன்றாகுமெனவும் அவ்வாறானதொரு நாடான இலங்கை சம்பந்தமாக
அவ்வாறான விடயத்தினடிப்படையில் அநீதியான முறையில் தீர்மானமொன்றுக்கு வருவது தவிர்க்கப்பட
வேண்டியதாகும் எனக் கூறியது.
எனினும் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மறந்த நிலையில் உள்ள வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.
பீரிசுக்கும் மிகவும் முறையில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசாங்கத்துக்கும்
நினைவுபடுத்தக்கூடிய விடயதானங்கள், இலங்கையை மோசமான நிலைக்கு நகர்த்தக்கூடிய அடிப்படை விடயங்கள்
பல உள்ளன. முதன்முதலாக மேலே குறிப்பிட்ட நிகழ்வு அபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வுகள் அல்ல.
இவ்வாறான நிகழ்வுகளின் பின்னணியில் மிகத் தெளிவாக காணக்கூடிய மிகவும் பயங்கரமான அரசியல்
மூலோபாயமொன்று உள்ளது. மிக உசிதமான சந்தர்பங்களில் திடீரென வெளிப்படும் இவை மீண்டும்
இவை மீண்டும் தீடீரென மறைந்து விடுகின்றது.
அதேபோல் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு முற்படுவோர் ஒரு சிலர்
மட்டுமே என்பதனால் சம்பந்தப்பட்ட விசாரணையை சிறப்பான முறையில் முற்றுக்பெறச் செய்வதற்கான
சந்தர்ப்பம் கிட்டவில்லையென கூறுவது கேள்விக்கான சிறந்த பதிலாகாது. உண்மையை மூடி மறைக்கும்
அவ்வாறான இளம் விளையாட்டுக்களால் இடம்பெறுவது, கேட்போர்களிடமுள்ள நம்பிக்கை கெட்டுவிடுவிக்கும்
நிலையே இடம்பெறுகிறது. சட்டத்தை மீறுகின்ற எந்தவொரு நபர் சம்பந்தமாகவும் சட்டம் அமுல்படுத்தப்பட
வேண்டுமென்பது சட்டத்தின் பிரதான நிலையமாகும். பொதுபலசேனாவின் தலைமைக் காரர்களினால்
இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்களை அவர்களது சண்டாள செயற்பாடுகளை அரசாங்கத்துக்கு தெளிவாக
பார்க்கக் கூடியவாறு படமாக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் துணிச்சலான நபர்கள்
சிலர் முன்வந்து சாட்சியமளித்த சந்தர்பங்களும் உள்ளன.
தண்டனை எவ்வாறானது?
விசாரணைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவோ அல்லது சில விசாரணைக் முடிவடைந்துள்ளதாகவோ
கூறுவது மட்டும் கேள்விக்கான பதிலாகாது. கேள்வியானது சட்டத்தை மீறியுள்ள இவர்களுக்கு
இதுவரை வழங்கிய தண்டனை என்ன என்பதேயாகும். இவ்வாறான சம்பவங்களுக்குப் பொருத்தமாக தற்போது
அமுலிலுள்ள சட்டங்களைக் கூட நிர்வாகிகள் மதிக்காத நிலையில், உண்மையான நகைச்சுவைக்காரனாக நடித்துக்
கொண்டிருக்கும் வாசுதேவ நாணயக்கார அவர்கள் வெறிப்பாஷைக்குகெதிராக புதிய சட்டதிட்டங்களை
கொண்டு வரவுள்ளதாக கற்பனைக்கதை கூறுவது உண்மையிலே கதையளப்பதாகும்.
இவ்வாறான மதவாத கடும்போக்கு சம்பவங்கள் சம்பந்தமான தகவல்கள் அதி முக்கியத்துவமளித்து
வெளியிடப்பட்டு வருவதாக கூறுகின்ற ஒரு சிலரும் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் செய்ய
வேண்டியதென்னவெனில், ஒரு சில இணையத்தளங்களை மேலிருந்து கீழ்நோக்கிய வரை வாசித்துப் பார்ப்பதேயாகும்.
சிறுபான்மை மதத்தவர்களுக்கெதிராக பொதுபலசேனா மேற்கொண்ட அட்டகாசங்கள் மற்றும் அவற்றின்
போது இவர்கள் பிரயோகித்த அருவருக்கத்தக்க மொழிப் பிரயோகம் சம்பந்தமாகவும் அப்போது இவர்கள்
கண்டுகொள்ளக் கூடியதாகவிருக்கும் இக்குழுவினர் தற்போது எந்தளவுக்கு பிரபல்யமடைந்திருப்பதென்றால்
அமைச்சரவை அமைச்சர்களுக்குக் கூட உடல்ரீதியான ஆபத்துக்களை ஏற்படுத்த பகிரங்க அச்சுறுத்தல்
விடுக்கக் கூடியளவுக்கு இவர்கள் துணிந்திருக்கிறார்கள் என்பதுதான் மற்றொரு பிரச்சினையாகவுள்ளது.
கவலைக்குரிய விடயம்
இவ்வச்சுறுத்தல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முழு உலகும் இதனை கண்டு கொள்ளக்
கூடியவாறு பிரச்சாரப்படுத்தப்பட்டள்ளமையும் முக்கியமில்லை. உண்மையிலே இவ்வாறான சூழலில்
மிகச்சிறிய அளவில் இவர்களது தலைவர்களது செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்
ரூபவாஹினி அலைவரிசைகளது தயாரிப்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய வலிமை இவர்களுக்குள்ளது.
அவர்களுக்கேயுரித்தான ஆடையுடன் நடமாடக்கூடிய முஸ்லிம் பெண்களை அச்சுறுத்தக்கூடிய இயலுமையும்
இவர்களிடமுள்ளது. தமக்கு எதிராகவுள்ள நடுநிலையான பௌத்த தேரர்களது (சிவ்ரை) அங்கியை
கழற்றுவதற்கும் அச்சுறுத்துவதற்குக் கூடி இவர்களுக்கு முடியும். சில மாதங்களுக்கு முன்
வட்டரக்க விஜித தேரர் பொருத்தமான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். 'அனைவரது துணிகளையும் அகற்றுவதற்கு
இத்தேரர்மார்கள் இவ்வாறு போராடுவதேன் என்பது தனக்கு விளங்கவில்லை'.
சட்டவாக்கத்தின் தடையேதுமின்றி அவ்வாறான காலம் கடந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு
பொதுபலசேவை இயலுமை பெற்றுள்ளது என்பதே உண்மையாகும். இவர்களது அச்சுறுத்தலுக்கு இலக்காகும்
அமைச்சரவை அமைச்சர்கள் இவற்றுக்கு எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாது தன்பாட்டில்
ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இன்று எமது அரசாளுமையின் கவலைக்குரிய நிலையும்
அவ்வாறானதாகவே உள்ளது.
நன்றி - ராவய
கிஷாலி பித்து ஜயவர்தன
Thursday, May 1, 2014
மக்கள் சக்தியைத் திரட்டி சமூக மாற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகிறோம் - அநுர குமார திஸாநாயக
* மக்கள் விடுதலை முன்னணியை எவ்வாறு சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம்?
மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டின் மாற்று அரசியல் தளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
இந்த நாட்டிலுள்ள பிரதான இரு கட்சிகளும் இந்த நாட்டை 68 வருடங்களாக ஆட்சி செய்துள்ளன. இந்த
இரு கட்சிகளும் முதலாளித்துவக் கட்சிகள். எனவே, எமது நாட்டுக்கு சமூகமாற்ற மொன்றின்
தேவை இருந்தது. எனவே தான், 1965 மே 17 ஆம் திகதி தோழர் ரோஹன விஜேவீர இந்தக் கட்சியை ஸ்தாபித்தார்.
எமது பயணத்தில் முதலாளித்துவ வர்க்கம் எமக்கெதிராக இரண்டு பாரிய படுகொலைகளை நிகழ்த்தியது.
1971 இல் எமக்கெதிராக
மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் போது 20,000க்கும் மேற்பட்ட எமது தோழர்கள் கொல்லப்பட்டனர். எமது கட்சியின்
ஸ்தாபகர் ரோஹன விஜே வீரவுக்கு ஆயுட்கால சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.
மீண்டும் 1976 இல் நாம் ஜனநாயக அரசியலுக்கு வந்தோம். இருப்பினும், 1983 ஆம் ஆண்டு எமது கட்சி மீண்டும்
தடை செய்யப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி, பாதாள உலகத்தினரைப் பயன்படுத்தி யுத்த சூழ்நிலையொன்றை
ஏற்படுத்தி, கறுப்பு ஜூலையை உருவாக்கி, நாமே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனச் சொல்லி எமது கட்சியைத்
தடை செய்தனர். இந்தத் தடைகளுக்குள்ளாலும் நாம் அரசியல் செய்து வந்தோம்.
1988, 1989 காலப் பகுதியில் எமது கட்சியின் ஸ்தாபகர் உட்பட 60,000 க்கும் மேற்பட்ட தோழர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இத்தோடு மக்கள் விடுதலை முன்னணி இல்லாதுபோய் விடும் என்றே அவர்கள் நினைத்தனர். ஆனால்,
மீண்டும் 1994 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை
முன்னணி ஜனநாயக அரசியல் தளத்துக்கு வந்து, இந்த நாட்டின் அரசியல் போக்கில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி
வருகின்றது.
*சர்வதேச ரீதியாக உள்ள கம்யூனிஸம் பற்றிய கருத்துக்களோடு பார்க்கும்போது,
மக்கள் விடுதலை முன்னணி
மதங்களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற கருத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ளது. இது
பற்றி என்ன சொல்கிறீர்கள்?
எமது நாட்டைப் பொருத்தவரையில், தோழர் ரோஹன விஜே வீர செய்த மிக முக்கியமான பணி, இலங்கை மண்ணுக்கேற்றவாறு மார்க்ஸிஸத்தை
வடிவமைத்ததுதான். ரஷ்யாவின் பாதணிகள் எமக்கு பெரிதாக உள்ளதாகவும், சீனாவின் பாதணிகள் எமக்கு
சிறியதாக உள்ளதாகவும் சொல்லி, எமக்கேற்ற பாதணிகளை நாம் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்
சொன்னார். எனவே, ஐரோப்பாவிலோ அல்லது உலகில் வேறெங்கிலுமோ உள்ள மார்க்ஸிஸம் போன்றல்லாது,
இலங்கை மண்ணுக்கேற்ற
வகையில் மார்க்ஸிஸத்தை அவர் வடிவமைத்தார்.
எமது நாட்டில் நான்கு பிராதான மதங்கள் இருக்கின்றன. அந்த மதங்கள் சகவாழ்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
எனவே, மதங்களின்
உரிமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம், தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை நாம் ஏற்றுக்
கொள்கிறோம்.
அவ்வாறே, எந்தவொரு மதத்தையும் உயர்ந்ததாகவோ தாழ்ந் தாகவோ நாம் கருதுவதில்லை. அவ்வாறே,
மதங்களை நடத்திச் செல்லும்
பொறுப்பு குறித்த மதங்களின் மதகுருக்களுக்குரிய செயல். அதனை அரசியலோடு இணைக்க முடியாது.
எனவே, முழுமையான
மத சுதந்திரம் ஏற்படுவது மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியின் கீழ்தான்.
இன்று மதத்தின் போர்வையில், அதனை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். அரசியல் தேவைகளுக்காக
சிலபோது சிங்கள இனவாதமும், பௌத்த தனித்துவமும், இந்து தனித்துவமும் முன்வந்து செல்கின்றன.
மக்கள் விடுதலை முன்னணி அனைத்து மதங்களுக்குமான சமமான உரிமையை ஏற்றுக் கொள்கின்ற,
அனைத்து மதங்களையும்
வழி நடத்திச் செல்வதற்கு அதன் மத குருமாருக்கு இருக்கின்ற உரிமையை ஏற்றுக்கொள்கின்ற,
அதற்காக அரச அனுசரணையை
வழங்குகின்ற தெளிவானதொரு நிலைப் பாட்டைக் கொண்டிருக்கின்றது.
என்றாலும், மக்கள் விடுதலை முன்னணி பற்றி எம்மை அணுகி தெரிந்து கொள்ளாமையினாலும், மக்கள் விடுதலை முன்னணியின்
எதிரிகள் பரப்பி விட்டிருக்கின்ற தகவல்களினாலும் தான் முஸ்லிம்கள் மத்தியில் இந்தக்
கருத்து ஓரளவு இருக்கின்றது. மதங்களுக்கு எதிரான நிலைப் பாட்டைக் கொண்டிருத்தல் என்பது
எமது நிலைப்பாடல்ல. அது எமது எதிரிகள் எம்மீது கட்ட விழ்த்து விட்டுள்ள பொய்யான செய்திகளாகும்.
* புரட்சிகள் மூலம் தான் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றுதானா நம்புகிறீர்கள்?
இல்லை, சமூக மாற்றம் மூலம் தான் அது சாத்தியம் என்று நாம் கருதுகிறோம். 1965 இல் சமூக மாற்றத்தை மையப்படுத்தியே
எமது கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. மக்களை விழிப்பூட்டி, இளைஞர் அமைப்புக்களை பலப்படுத்திக்
கொண்டு வரும்போது, அச்சம் கொண்ட முதலாளித்துவ கட்சிகள் எம்மீது அடக்குமுறையைப் பிரயோகித்தன. இதன்போது,
இரண்டு தெரிவுகள்தான்
எம்முன்னிருந்தன. ஒன்று, அரசியலை விட்டும் ஒதுங்குதல். மற்றையது, அடக்குமுறையை எதிர்த்து நிற்பது.
இதில் சரியான தெரிவை நாம் எடுத்தோம். அடக்குமுறையை எதிர்ப்பதற்காக ஆயுத ரீதியான முன்னெடுப்பை
கைக்கொள்ள வேண்டும் என்று கட்சி தீர்மானித்தது.
மீண்டும் 1976 இற்குப் பின்னர் அரசியல் செயற்பாட்டில் இறங்கிய நாம், 1978 இல் நடைபெற்ற இடைத் தேர்தலில்
போட்டியிட்டோம். 1980 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டோம். 1981 இல் நடைபெற்ற அபிவிருத்தி சபை தேர்தலை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்தது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அதில் போட்டியிட்டது.
எனவே, இந்த நாட்டின்
ஜனநாயக அரசியலில் பங்கெடுக்கின்றதொரு கட்சி நாம்.
ஆனால், 1983 இல் ஜே.ஆர். ஜெயவர்தன மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தார். தடை செய்தது மட்டுமல்லாது
எம்மீது அடக்குமுறையைப் பிரயோகித்தார். அப்போதும் நான் ஏற்கனவே சொன்ன இரு தெரிவுகள்
தான் எம்முன்னே இருந்தன. ஒன்றில், அரசியலை விட்டும் ஒதுங்க வேண்டும். அல்லது, ஆயுத ரீதியான வழிமுறையைக்
கையாள வேண்டும். பின்னர், அவர் இந்தியப் படைகளையும் இங்கு அழைத்து வந்தார். ஆயுத ரீதியான
போராட்டம் எமது தெரிவல்ல. முதலாளித்துவ வர்க்கம் எம்மீது திணித்த தெரிவுதான் அது.
வரலாற்றில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைகள் பெற்றது
போன்று, முதலாளித்துவ
வர்க்கம் படிப்பினைகள் பெற்றுள்ளன. எனவே, மீண்டும் எம்மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முதலாளித்துவ
வர்க்கத்துக்கு முடியாது.
எனவே, இனியும்
இலங்கையில் ஆயுத ரீதியான அரசியல் போராட்டமொன்று செல்லுபடியாகாது என்பதை நாம் ஏற்றுக்
கொள்கிறோம். இந்த நாட்டு – சிங்கள, தமிழ், முஸ்லிம்- மக்களை தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள் மூலம் ஒன்றுதிரட்டி
மாபெரும் மக்கள் சக்தியொன்றை திரட்டி சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே
நினைக்கின்றோம்.
* மக்கள் விடுதலை முன்னணி சுமார் 50 ஆண்டுகளாக செயற்படுகின்றது. ஆனால், மக்கள் விடுதலை முன்னிணியின்
சிந்தனை இன்னும் மக்கள்மயப்பட வில்லையே!?
மக்கள் விடுதலை முன்னணியின் சிந்தனையை நாம் மிக வேகமாக மக்களை நோக்கிக் கொண்டு
சென்றுகொண்டிருக்கின்றோம். ஆட்சியைக் கவிழ்த்து விட்டு இன்னுமொரு ஆட்சியைக் கொண்டு
வருவது இலகுவான விடயம். ஏனென்றால், நல்லதொரு விடயத்துக்குப் பகரமாக மோசமான தொரு விடயத்தை வழங்குவது
இலகுவானது. மோசமானதொரு விடயத்துக்கு பகரமாக இன்னுமொரு மோசமான விடயத்தை வழங்குவதும்
இலகுவானது. ஆனால், மிகவும் மோசமான ஒரு விடயத்துக்குப் பகரமாக நல்லதொரு விடயத்தை வழங்குவது கடினமானது.
எமது நாட்டில் இப்போதிருப்பது மிகவும் மோசமான நிலையொன்றாகும்.
இந்த நாட்டுக்கு நல்லதொரு விடயத்தை வழங்க வேண்டும். அது ராஜபக்ஷவின் ஆட்சியைக்
கவிழ்ப்பது மாத்திரமல்ல. எமக்கு சிறந்ததொரு சமூக மாற்றம் அவசி யமாயுள்ளது. சமூக மாற்றமொன்றை
செய்வது இலகுவானதல்ல. ஏனென்றால், தற்போதுள்ள சமூக முறைமையை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே அனைத்து
வகையான ஒழுங்குகளும் கட்டி யெழுப்பப்பட்டுள்ளன.
கல்வித் துறையைப் பாருங்கள். போட்டி போட்டுப் படித்து பொறியியலாளராகவோ வைத்தியராகவோ
உருவாகி கரை சேர்ந்து கொள்ள வேண்டுமென்றே எமது உறவுகள் எம்மைத் தூண்டுகின்றன. இந்த
சமூக முறைமையில் உள்ள அநீதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அவர்கள் எம்மைத்
தூண்டுவதில்லை. நீங்கள் சமூக மாற்றத்துக்காக சிறந்த முறையில் உழைக்கிறீர்கள் என்று
நண்பர்கள் சொல்வதுமில்லை. இந்த வேலைகள் போதும், இனி தொழிலொன்றை செய்து கொள் என்றுதான்
நண்பர்கள் சொல்வார்கள்.
முழு மொத்த சமூகமும் தற்போதிருக்கும் சமூக முறைமை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான
போக்கிலேயே இருக்கின்றது. சிந்தனைகள், கலாசாரம், சினிமா, கலை, கல்வி, மக்களின் எண்ணங்கள் என அனைத்தும் இந்த முதலாளித்துவத்தின் இருப்புக்காக
இருக்கின்றன. இவற்றுக்கு எதிராக சிந்தனை ரீதியாகப் போராடுவதே எமது பணி. இந்தப் பணி
ஆட்சியைக் கவிழ்ப்பது போன்றோ, ஒரு தலைவருக்குப் பதிலாக இன்னுமொரு தலைவரைக் கொண்டு வருவது போன்றோ
இலகுவானதொரு காரிய மல்ல.
* மக்கள் விடுதலை முன்னணி பெரும்பான்மை சமூகத்துக்குள் போயுள்ள அளவுக்கு சிறுபான்மை
சமூகங்களுக்குள் போயில்லையே!?
தமிழ் மொழி பேசுபவர்களுடனான கருத்தாடலை ஏற்படுத்துவதற்கு, எமது அரசியல் பயணத்தில் நாம்
முயற்சிக்கிறோம்.
இரு மொழிகளிலும் செயற்படும் ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணிதான். நாம் ஒரு கோஷத்தை
எழுதினால் அதனை இரு மொழிகளிலும் எழுதுவோம். ஒரு கடிதத்தை எழுதினால் இரு மொழிகளிலும்
அதை எழுதுவோம். எமது பிரதான கூட்டங்களில் இரு மொழிகளிலும் பேசுவோம். தமிழ் மொழி பேசும்
தமிழ், முஸ்லிம்களுக்கு
மத்தியில் செயற்படுவதற்கு முழு முயற்சியையும் நாம் மேற்கொள்கிறோம்.
ஆனால், 1983 இற்குப் பின்னர், தமிழர்களுடனான கருத்தாடல் வித்தியசமானதொரு தளத்துக்குச் சென்றது. முஸ்லிம் கருத்தாடல்
வேறொரிடத்தில் மறைந்திருந்தது. எனவே, தேவையானளவு கருத்தாடலை ஏற்படுத்த எம்மால் முடியாமல் போனது.
ஆனால், இந்த
முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில், குறிப்பாக முஸ்லிம்களுடன் நாம் கலந்து ரையாடல்களை நடத்தினோம்.
வெலிகமை, களுத்தரை, தர்கா டவுன், மதுகமை, புதுக்கடை போன்ற இடங்களில் முஸ்லிம்க ளுடன் நாம் பெருமளவிலான கலந்துரையாடல்களை
நடத்தினோம்.
எமது கூட்டங்களுக்கு வந்த அனைத்து முஸ்லிம்களும் வாக்களித்திருப்பார்கள் என்று
சொல்ல முடியாது. ஆனால், முஸ்லிம்கள் முதற் தடைவையாக எங்களுக்கு செவிமடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.
எம்மை முஸ்லிம்கள் வரவேற்றார்கள். நாம் யார் என்பதை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிந்து
கொள்கிறார்கள். ஆனால், இது போதாது. இதனை இன்னும் அதி கரிப்பதற்கு நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
* இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு. இந்தப் பன்மைத்துவத்தை பாதிக்கச் செய்யும் விடயங்கள்
என்ன?
இலங்கை ஒரு பல்லின நாடு என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு சிங்கள,
தமிழ், முஸ்லிம், பர்கர், மலே இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்போது வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்பது முக்கியமில்லை.
இந்த நாட்டில் பிறக்கின்ற, இந்த நாட்டில் வாழ்கின்ற, இந்த நாட்டில் மரணித்து இந்த மண்ணுக்கு
உரமாகும் பிரதான இனங்கள் இவை.
இந்த நாட்டில் தேசிய ஒற்றுமை வர வேண்டும். ஆனால், இதுவரை நடந்த ஆட்சிகள் இனங்களுக்கிடையில்
இடைவெளியையும் சந்தேகத்தையும் நம்பீக்கையீனத்தையும் அதிகரிக்கவே முயற்சித்தன. சிலபோது
சிங்கள, தமிழ்,
முஸ்லிம் இனவாதங்கள்
முன்னெழுந்து வருகின்றன. இந்த நாட்டில் அனைத்து இனவாதங்களையும் எதிர்க்கின்ற கட்சி
மக்கள் விடுதலை முன்னணியே.
* அரச தரப்பினரை பகிரங்கமாக விமர்சிக்கீறீர்கள். பயமில்லையா?
இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதற்காகவே நாம்
செயற்படுகிறோம். நான் என்பது நான் மட்டு மல்ல. எனக்குப் பின்னால் ஒரு கட்சி இருக்கின்றது.
அந்தக் கட்சியின் பலம், தைரியம்தான் எம்மை விழிப்பூட்டியிருக்கின்றது.
* அப்படியாயின், பயமில்லை என்று சொல்கிறீர்கள்?
ஆம், எந்தவொரு
பயமும் இல்லை. நாம் ராஜபக்ஷ மஹத்தயாவுக்கு கடனில்லை. ராஜபக்ஷ தான் எமக்குக் கடன். அவருடன்
எங்களுக்கு பெரியளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இல்லை. எமக்கு அவருடன் ஒரு கொடுக்கல்
வாங்கல்தான் இருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், நாம் அதனை எதிர்க்கிறோம்.
இதுதான் எமது கொடுக்கல் வாங்கல். ஆனால், ஏனையோர் பயந்துபோவதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில்,
அவர்களுக்கு கொடுக்கல்
வாங்கல்கள் இருக்கின்றன.
நன்றி. meelparvai
நேர்காணல்- அஷ்கர் தஸ்லீம்
Subscribe to:
Posts (Atom)













