Thursday, April 24, 2014

ஆப்பிழுத்துக் கொண்டதா முஸ்லிம் சமூகம்?

தமிழ் சமூகம் தனக்குத் தானே இழைத்துக் கொண்ட பெருந் துரோகத்தில் ஒன்றுதான் தன்னைத் தானே காட்டிக்கொடுக்க ஆரம்பித்தது. போராடப்புறப்பட்ட பல்வேறு இயக்கங்கள் இறுதியில் ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்ததோடு தம்மைத் தாமே அழித்துக் கொண்ட வரலாற்று வடுக்கள் எட்டிப் பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது.

இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை ஏறத்தாழ சம அளவில் தமிழ் சமூகம் தம்மைத்தாமே பலவீனப்படுத்திய அதே நிலையாக இருக்கிறது என்றால் மிகையில்லை.

காட்டிக் கொடுப்புகளின் ஆரம்பம்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பாரம்பரியம் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எப்போதுமே ஆளுந்தரப்போடான ஒட்டுறவில் தங்கியிருக்கும் சூழ்நிலைக்கு பழக்கப்பட்டது.

எனவே ஒரு எல்லை, குறிப்பாக தமது நலன் சார் எல்லை தொடப்படும் வரை சமூகத்தின் இன்னோர் பகுதியைப்பற்றிய கவலையற்றே அரசியல் தலைமைகளும், சமூகத் தலைமைகளும் வாழப்பழகிக்கொண்டு வருகின்றன.

தற்கால இலங்கை முஸ்லிம்கள் இரண்டு பிரிவுகளால் பல கிளைகளாக வாழ்கின்றனர். முதலாவது அரசியல் பிரிவு : இப்பிரிவில் அவரவர் தாம் விரும்பிய கட்சிகளையும் கட்சித் தலைமைகளையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காத நிலையில் வாழப்பழகியதால் சமூக நீதி தொடர்பிலும் மெளனமாக இருக்கப் பழகிக்கொண்டனர்.

இரண்டாவது, மார்க்கப் பிளவு: இதுவே இலங்கை முஸ்லிம்களை மிக ஆழமாக பிரித்து வைத்திருக்கும் பலவீனப்படுத்தியிருக்கும் தற்காலத்தின் பிரதான காரணியாக இருக்கிறது.

இந்த மார்க்கப் பிளவுகளால் ஆரம்பித்த காட்டிக் கொடுப்புகள் தான் இன்றைய சூழ்நிலையை முஸ்லிம்களை அடியோடு பலவீனப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இன்றைய சூழ்நிலையில் இலங்கை தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிரிந்து தனியாக இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரும் இளமையும் வேகமும் சமூகத்தின் ஏனைய பகுதியினால் அடங்காப்பிடாறித் தனமாக பார்க்கப்படுவதை மறுத்தோ மறைத்தோ உரையாடுவதில் பலனில்லை.

ஜனநாயக சோசலிஷ குடியரசொன்றின் பிரஜைகளாகத் தமது அனைத்து உரிமைகளுக்கும் போராடும் அத்தனை உரிமைகளும் தகுதிகளும் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கிறது என்பதை யாரும் மறுதலிக்கவில்லையாகினும் அமைப்பை முற்படுத்தி அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் ஏனைய அமைப்புகள் தம்மைத் தூரப்படுத்திக்கொள்கின்றன.

இவ்வாறு தூரப்படுத்திக்கொள்ளும் அமைப்புகளும் துரதிஷ்டவசமாக தமது அமைப்பின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளவே தூரப்படுத்திக்கொள்கின்றன எனும் உண்மையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தரீக்கா அமைப்புகள்

நவீனத்துவம் பற்றிப் பேசக் கிளம்பியதோடு நிற்காத அமைப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக நொந்து கொள்ளும் அமைப்பு இலங்கையில் வாழும் தரீக்கா சார் சமூகமாகவும் அவர்களைப் பொறுத்தவரையில் ஆளுந்தரப்பின் ஆதரவும் அரவணைப்புமே அவர்களது இருப்பை பாதுகாக்கும் என்பதே கள யதார்த்தமாக கருதுவதால் ஆட்சியாளர்களை சுற்றித் தம் பிரசன்னத்தை வெகுவாக வளர்த்திருக்கிறார்கள். எனவே அவர்கள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் அன்னிய பழக்கவழக்கங்களை இலங்கைக்குள் புகுத்தும் செயற்பாட்டாளர்களாகவே ஆட்சியாளர்கள் கண்களுக்கும் தெரிகிறார்கள்.

ஜமாத் ஏ இஸ்லாமி

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பைப் பொறுத்தவரை இலங்கை மண்ணில் ஒரு அமைப்பாக செயற்பட்ட போதும் இலங்கை சமூகத்தின் அரசியல் நிலைப்பாட்டை வெளிநாட்டு விளைவுகளோடு தொடர்பு படுத்தி அவர்கள் எண்ணங்களை எப்போதுமே சொந்த மண்ணின் அரசியலோடு கலக்க விடாமல் வைத்திருப்பதில் மிகக் கெட்டித்தனமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறார்கள்.

தப்லீக் ஜமாஅத்

அன்றாட வாழ்வியலின் இஸ்லாம் பற்றிய சிந்தனையோடு வெளிநாட்டு கலாச்சார இறக்குமதியிலும் கவனம் செலுத்தி வரும் தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்தவரை தரீக்கா நிலைப்பாடுகளிலிருந்து விடுபட்ட மக்களின் ஏகோபித்த அடுத்த தெரிவாக இயல்பானதும் சாதாரணமானதுமான இஸ்லாமிய வழி காட்டிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டதோடு முடிந்தளவு உயர் பதவிகளின் பயனால் ஆட்சியாளர்களை நம்பி வாழ்பவர்களான தலைமைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி பிரதான ஜமாத்துகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணிச் செயற்பாடு இருக்க இதன் வெற்றிடத்தில் புகுந்து கொள்ளும் அரசியலானது தத்தம் வசதிக்கேற்ப பிரதேச வாரியாகவும் கட்சியடிப்படையிலும் முஸ்லிம்களை சர்வசாதாரணமாக பிரித்து வைத்திருக்கிறது.

இப்படியே வாழப் பழகிக்கொண்ட முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் பிரதான சவால் கடந்த காலத்தில் ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்ததன் விளைவிலிருந்தே ஆரம்பிக்கிறது.

தரீக்கா காரர்களுக்கும் தவ்ஹீத் காரர்களுக்கும், தவ்ஹீத்தாருக்கும் ஜமாத்தே இஸ்லாமிக்கும், ஜமாத்தே இஸ்லாமிக்கும் தப்லீக்குக்கும் என்றும் மீண்டும் சுழற்சியடைப்படையில் குறுக்குப் போட்டிகளும் இடம்பெற்ற போதெல்லாம் எமது சமூகம் என்ன செய்தது என்பதிலிருந்து இன்றைய அவல நிலைக்கான விடை கிடைக்கிறது.

அதுதான் அவ்வப்போது எமக்கிடையில் தொடர்ந்து வந்த காட்டிக் கொடுப்புகள்.

இந்தக் காட்டிக்கொடுப்புகளின் விளைவில் நாம் விட்டுச் சென்ற ஆதாரங்கள் இன்று நமக்கெதிராகக் கிளம்பியிருக்கும் நிலையில் நமது அரசியல் தலைமைகளும் ஒரு சமூகமாக நாமும் கூட மெளனித்து இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

எனவே, நமக்கெதிராக இயங்குவோரிடம் நாம் ஏற்கனவே சான்றுகளைத் தெளிவாக வழங்கியிருக்கிறோம் எனும் உண்மைகளை உணர்ந்தவர்களாக எதிர்காலத்தை எதிர் நோக்கும் தேவை நமக்கிருக்கிறது.

இனியும் இவ்வாறு கூறாகிப் பிரிந்து எமது எதிர்காலத்தைத் தொலைக்கப் போகிறோமா அல்லது இந்த அமைப்புப் பிளவுகளுக்கு முடிவு கட்டப் போகிறோமா என்பதை சிந்திக்கும் காலமிது!

நன்றி.  மானா(ww.sonakar.com)

Wednesday, April 23, 2014

EPF


வீரியமடையும் பௌத்த தேசியவாதமும் இலங்கையின் எதிர்காலமும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்நாட்டினை ஒரு பௌத்த நாடாக மாத்திரமே அடையாளப்படுத்துவதில் குறியாக
இருந்து, அதற்காக சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட பௌத்த தேசியவாத சக்திகள் காலத்துக்கு காலம் பல்வேறு அடையளங்களிநூடாகவும்,வடிவங்களிநூடாகவும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து வந்திருக்கின்றனர்.

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்த நிலையிலும், அதனைத் தொடர்ந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் கூடிய நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கான கால எல்லைகள் சட்ட ரீதியாக நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் பௌத்த தேசியவாத சிந்தனைகளை சிங்கள மக்களுக்கு மத்தியில் தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கும்,அதன் மூலம் தமது ஊழல்,நிர்வாக சீர்கேடுகளை மறைப்பதற்குமான அரசாங்கத்தின் ஒரு  நிழல் இயக்கமே பொது பல சேனாஎன்பது அனைவரும் அறிந்த விடயம்.

ஆரம்பத்தில் பொது பல சேனாவின் நடவடிக்கைகளில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் உடன்பாடு கண்டிராத போதும் அரசாங்கத்தின் மௌன அங்கீகாரமும், பல சேனாவின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு பொறிமுறையினை கண்டறிவதற்கு மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட சக்திகள் தவறியுள்ள நிலையிலும் சிங்கள மக்களுக்கிடையில் பொது பல சேனாவுக்கான அங்கீகாரம் மெல்ல மெல்ல வீரியமடைந்து வருகின்றன.

கற்றவர்கள்,மிதவாதிகள் , ஆன்மீகத் தலைவர்கள் என பலரும் பொது பல சேனாவின் நடவடிக்கைகளில் நியாயம் காண முற்படுகின்றனர்.அல்லது நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பொதுபலசேனாவின் செயற்பாடுகளை அஸ்கிரிய பீட தேரர் மேதாகம தம்மானந்த நியாயப்படுத்தியிருக்கின்றார். பௌத்த மதத்தின் மரபுகளை பேணி வருகின்ற ஒரு நிறுவனத்தின் சமயத் தலைவர் அதற்கு நேர்மாறான ஒரு குழுவின் அத்துமீறிய செயற்பாடுகளை நியாயப்படுத்தியிருப்பது மிகவும் அதிர்ச்சியானதும், ஆச்சரியமானதும் ஆகும்.

ஏறக்குறைய பொதுபல சேனாவின் கூச்சல்களை ஒத்ததாகவே தேரரின் வாசகங்கள் அமைந்திருக்கின்றன.

when the government was resettling internally displaced persons in old villages along the Pulmude Road from Vavuniya to Trincomalee, security forces personnel had informed the Asgiriya Chapter that illegal resettlement was taking place in Mannar. Similar situations had occurred in the Lahugala forest, where they cut trees after the tsunami in 2004, in Pottuvil and even in the Akurana Town where the construction of housing has been done in a manner causing blocks and disturbances, he elaborated.


The Thera alleged that the true cost of the destruction of the forests of the Wilpattu National Park has been ignored. “As this is a national issue that we should talk about and when we do not talk about, it creates the environment for the BBS’s intervention” he added. (Ceylon Today)


இதன்மூலம் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் நினைத்ததை விடவும் மிகவும் மோசமான,சிக்கலான ஒரு நிலைமையை அடைந்துள்ளது என்பது தெளிவாகின்றது. தவிரவும் இப்பிரச்சினையானது

யாரும் நினைத்த மாத்திரத்தில் இந்நிலைமைகளை கையாண்டு விடமுடியாத அளவுக்கு கைமீறிப் போய்க்கொண்டிருப்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

இது தொடர்பில் கடந்த கால வரலாற்றுத் தவறுகள் மீதான சுய விமர்சனங்களும்,விவாதங்களும் உடனடியாகவே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இலங்கை மக்களுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். அது முதன் முதலில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளில் இருந்தே ஆரம்பமாக வேண்டும்.

நிகழ்கால பதட்டங்களை தனிப்பதற்கான சரியான பொறிமுறை ஒன்றை காணத் தவறியமை மற்றும் கடந்த காலங்களில் தேசிய அரசியலில் தமது வகிபாகத்தினை சரிவர செய்யத் தவறியமை என்பவற்றின் அடிப்படையில் அது முஸ்லிம் அரசியல் தலைமைகளைச் சாருகின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கடந்த கால அரசியல் தவறு என்பது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் இறுதி நான்கு வருட அதிகார பேரம் பேசும் அரசியலில் தொடங்கி அவரது மரணத்தின் பின் ரவூப் ஹகீம் தலைமையில் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக ஆட்சி மாற்றங்களை நடாத்திக் காட்டியது உட்பட இன்று அதிகார ஆசைகளுக்காக முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல்வேறு கூறுகளாக பிரிக்கப்பட்டு முஸ்லிம் சமூகம் பலவீனப்படுத்தப்பட்டது வரை மறுவாசிப்பு செய்யப்படல் வேண்டும்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை நியாயமான கோரிக்கைகள வெல்வதற்காக பிழையான வழிமுறைகளை கையாண்டமை தொடர்பில் சுயவிமர்சனம் செய்யப்படல் வேண்டும்.

தமது உரிமைகளை மறுத்த அரச தரப்புடன் போராடி தமது உரிமைகளை பெற நினைத்தவர்கள் தமது இலக்குகளாக அப்பாவி சிங்கள பொது மக்களையும், மத குருக்களையும் அவர்களது சமயத் தளங்களையும் தமது தமது தாக்குதல் இலக்குகளாக தேர்வு செய்ததன் மூலம் அரசாங்கத்தினதும்,அரச படைகளினதும்  எந்தவொரு நடவடிக்கைகளும் சிங்கள மக்களையும்,அவர்களது பௌத்த மதத்தினையும் பாதுகாப்பதற்கான ஒரு நியாபூர்வமான நடவடிக்கையாகசிங்கள மக்கள் தீர்ப்பு செய்யும் வகையில் அவர்களை  அரசாங்கம் வழிநடாத்துவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கடந்த 30 வருடங்களில் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து பல்வேறு துன்பங்களை கடந்து வந்த சிங்கள மக்கள்,
இனிமேலும் அத்தகைய ஒரு நிலைமை தமக்கு எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என நினைக்கின்றனர். அதற்காக தீவிரப்போக்கான ஒரு அணுகுமுறை அவசியம் என்பது கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளால் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
சிங்களத் தரப்பினரைப் பொறுத்தவரை இலங்கைத் தீவின் சமூகங்களுக்கு இடையிலான சுமூகமான வாழ்க்கை சீரழிக்கப்பட்டது தொடர்பில் அதன் பிரதான பொறுப்புக் கூறலை சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்து ஆட்சி செய்த சிங்கள அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும் என்பதிலிருந்து சுயவிமர்சனம் துவங்கப்படல் வேண்டும்.

ஏனெனில்,மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஸ்ரீ.ல.சு.க யும் ஐ.தே.க வும் தாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான
இனவாதக் கொள்கைகளை சிங்கள மக்களுக்குள் பிரச்சாரம் செய்தனர்.

அதன்வழி தொடர்ந்த பாரம்பரியம் இன்று நேரடியான அரசியல் ஸ்தாபனங்களுக்கு ஊடாக அல்லாமல் பௌத்த சமயம் சார் நிறுவனங்களுக்கு ஊடாக தொடர்கிறது.

ஆட்சியாளர்கள் தமது ஊழல்களையும்,வினைத்திறன் குன்றிய தமது நிருவாகத்தின் பலவீனங்களையும் மறைப்பதற்காக சிறுபான்மை
மக்களுக்கெதிரான இனவாத சிந்தனைகளை சிங்கள மக்களுக்கிடையில் ஊட்டி வளர்க்கின்றனர்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளின் விளைவுகளை நாட்டு மக்கள் போதுமானளவு அனுபவித்து விட்டனர். இனிமேலும் அத்தகைய மோசமான விளைவுகளை சந்திப்பதற்கு மக்களுக்கு சக்தியில்லை.

ஆட்சியாளர்கள் தமது குறுகியகால லாபங்களுக்காக இவ் இனவாத சக்திகளை ஊக்குவித்தாலும் அதனால் நீண்ட காலங்களில் பயனடையப் போவது புதிய உலக ஒழுங்கினை வடிவமைத்து வருகின்ற வெளிச்சக்திகளே ஆகும்.

அனைத்து இன இலங்கை மக்களும் நீண்ட காலங்களில் பாதிப்படையப் போகின்றார்கள்.

ஏற்கனவே கரையோர நிலங்களின் ஆக்கிரமிப்பு,தீர்வையற்ற கசினோ சூதாட்டம்,விவசாய நிலங்களின் அழிப்பு என பல்தேசியக் கம்பனிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்ட நிலையில் அவற்றில் இருந்து பெரும்பான்மை மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதத்தினை இன்று வரை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை அபே ரடஇது எங்களுக்கு (பௌத்தர்களுக்கு) சொந்தமான நாடு என்ற தேசியவாத அலைகளுக்குள்  அவர்கள் அள்ளுண்டு சென்றாலும், குறுகிய எதிர்காலத்துக்குள் இது சிங்கள,தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவர்,என யாருக்குமே சொந்தமில்லாத பல்தேசியக் கம்பனிகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற கொள்கை
வகுப்பாளர்களின் தீர்மானங்களுக்கு அமைவாக ஆட்சி செய்யப்படுகின்ற ஒரு நாடாக மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன என்பதை சமகால நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவற்றை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு செயற்படாது போனால் நாடு இன்னுமொரு பாரிய அனர்தத்தினை சந்திப்பது தவிர்க்க இயலாமல் போவது மாத்திரமின்றி அது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், ஒற்றுமைக்கும் நிரந்தரமாகவே வேட்டு வைப்பதாகவே அமைந்து விடும்.

நன்றி. Abdul Wajith (www.sonakar.com)



Saturday, April 19, 2014

பௌத்த சாசன மத குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர், ஹுனைஸ் பாரூக் இருவருக்குமிடையில் கடும் வாக்கு வாதம்.

கடந்த 2014.04.01 பாராளு மன்றத்தில் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் மு.ப. 10.30 மணியளவில் பிரதி அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்திற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர், இந்து, கிறிஸ்தவ, பௌத்த முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் அத்துரலிய ரத்ன  தேரருக்கும் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் சுமார் ½ மணித்தியாலத்திற்கும் மேலாக கடும் வாக்கு வாதம் இடம் பெற்றது. இடையில் குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குனவர்தன இவ்வாக்கு வாதத்தை சுமுக நிலைக்கு கொண்டுவந்தார். இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத் தரணி ஹுனைஸ் பாரூக் கருத்து தெரிவிக்கையில்.....
அத்துரலிய ரத்ன தேரர் பௌத்த சாசன மதவிவகார அமைச்சின் செயலாளரிடம் வேண்டு கோள் ஒன்றை விடுத்தார். அதாவது பௌத்த சாசன அமைச்சின் சுற்று நிறுபத்திற்கு அமைய அனுமதி பெறப் படாத பள்ளி வாசல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இந்த சுற்று நிறூபத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். 
அதற்கு நான்:- 'இன்று நாட்டில் எத்தனையோ அனாச்சாரங்கள் நிகழ்கின்றன மதஸ் தாபனங்களுக்கருகில் மது சாலைகள், உடரடி கள், சூதாட்ட அமைப்புகள் போன்றன அமைக்கப் பட்டு மத வழிபாடுகளுக்கு இடைஞ்சல்கள் செய்யப் படுகின்றன இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும்' என்றேன். 
இதற்கு கருத்து தெரிவித்த தேரர்:- நீங்கள் தான் வெளிநாடுகளுக்கு பிழையான தகவல்களை கொடுப்பவர்கள் பள்ளிகளைத் தாக்கியதாக என்றார்.
அதற்கு நான் அப்படியென்றால் தம்புள்ளை பள்ளிவாசல்களைத் தாக்கியது, மகியங்கனை பள்ளிவாசலிற்குள் பன்றியிரைச்சியைப் வீசியெறிந்தது, கிரேன்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்கள் இவற்றையெல்லாம் செய்தது முஸ்லிம்களா? என்று வினவினேன். அதற்கு அவர்  ஆம் முஸ்லிம்கள்தான் என்னிடம் ஆதாரம் உண்டு, முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளே உள்ளே கருத்து முரண்பாட்டால் பள்ளிகளை உடைத்திருக்கிரார்கள் இது தெடர்பில் 17பேர் கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது என்றார். 
அதற்கு நான் ஆதாரம் இருந்தால் சமர்பித்துவிட்டு கதையுங்கள், பெறுப்புவாய்ந்த மதகுறு, அதுமட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர். நீங்கள்  பெறுப்பில்லாமல் இவ்வாறு கூறுவது தான் இந்த நாட்டில் அச்சத்தையும் மதங்களுக் கிடையில் பிரச்சினையும் ஏற்படுத்தியுள்ளது. மதவழிபாட்டுத் தளம் எந்த சமயத்திற்குச் சொந்தமானது என்றாலும் அதனை கௌரவப் படுத்துவதும், பாதுகாப்பதும் பெறுப்பு வாய்ந்தவர்களின் பொறுப்பு. ஆனால் இன்று சில  இனவாத குழுக்கள் இதனை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள். சட்டத்தை கையில் எடுத்து தான் விரும்பிய படி செயற்பட எவருக்கும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். அது எந்த தரப்பினராக இருந்தலும் சரி நாங்கள் பேசிப் பார்ப்போம், கதைக்க வேண்டிய இடத்தில் கதைப்போம், தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்போம், நீதியை நாடி நீதி மன்றம் செல்வோம், முடியாவிட்டால் சர்வதேச உதவியைக் கூட நாட நான், எனது கட்சி தயாராக இருக்கிறது. மேலும் கிரேண்பாஸ் பள்ளி பிரச்சினை தொடர்பில் வீடியோ எம்மிடம் இருக்கின்றது. இதனை பொலீஸ்மா அதிபருக்கு அனுப்பியிருக்கின்றோம். அதைப் பார்த்தால் தெரியும் யார் பள்ளியைத் தாக்கியது என்று கூறினேன்.
இதற்கு அவர் அது முறைப்படி கட்டிய பள்ளியல்ல என்றார். அதற்கு நான் பள்ளி முறைபடி கட்டியதா இல்லையா என்பதைப் பார்க்கவும் அதற்கு நடவடிக்கை எடுக்கவும் நாட்டில்  சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தை உங்களுக்கு அல்லது பள்ளியைத் தாக்கிய காடயர்களுக்கு யார் கையளித்தது. இதைத் தான் நான் சொல்கின்றேன் ஒரு சில இன வாதிகள் தங்களின் அரசியல் கதிரைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இப்படியான சிறுபான்மையினரின் மதஸ்தாபனங்களை தாக்குகின்றார்கள். அதனைத் தட்டிக் கேற்பவர்களை மீடியாக்களில் இனவாதிகள் என்று சொல்கின்றார்கள.; மீண்டும் நான் எச்சரிக்கின்றேன் இதற்குப் பிறகு சட்டத்தை தனது கையில் விரும்பிய படி எடுத்து ஆட்டம் போடுபவர்களை நிச்சயம் நாங்கள் அடக்குவோம்.
இதற்கு அவர் முஸ்லிம்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிறுவனங்கள் பணம் அனுப்புகின்றன அவர்கள் தான் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்றார். அதற்கு நான் நாங்களும் சிந்திக்கிறோம் இந்த இன வெறியாட்டத்தில் ஈடுபடுகின்ற மதஸ்தாபனங்களை (பள்ளிவாசல்களை) தாக்குபவர்களுக்கும் வெளிநாட்டுப் பணம் வருகின்றதோ தெரியவில்லை ஏனென்றால் உள்நாட்டில் இருக்கின்ற இனவாத அரசியல் கட்சிகளுக்கும் வெளிநாட்டில் சில நாடுகளுக்கும் மீண்டும்  இலங்கையில் இன யுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் இலாபம் அடைய வேண்டிய தேவையுள்ளது. அதன் ஒருகட்டமாகத்தான் நான் இதனைப் பார்க்கின்றேன் என்றதோடு சட்டங்களோ, சுற்று நிருபங்களோ இயற்றப் படுவது இலங்கையிலுள்ள அனைத்து மதங்களுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். அது பௌத்த விகாரையாக இருக்கலாம், இந்து கோவிலாக இருக்கலாம், கிரிஸ்தவ பள்ளியாக இருக்கலாம் அல்லது முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம் என்று செயலாளரிடம் கேட்டுக் கொண்டேன். அதனை அவர் ஏற்றுக் கொண்டதோடு எம்மிருவருக்குமிடையில் எறியப்பட்ட வாக்குவாதத்தினை அமைச்சர் தினேஸ் குனவர்தன, மதவிவகார பிரதியமைச்சர் ஆகியோர் தலையிட்டு சுமுக நிலைக்கு கொண்டு வந்ததோடு, சட்டத்தை விரும்பிய  படி அனைவரும் கையில் எடுக்க முடியாயது என்ற கருத்தை இருந்த அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டனர்.    

நன்றி. madawalanews.com